ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி தனது வாக்கினை பதிவு செய்யதார் !!
இந்தியா நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி தமிழ்நாடு நாமக்கல் ராமபுரம்புதூர் அரசு நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் 19.04.2024 12:30pm மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்யதார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததார். அப்போது அவர் பேசியதாவது இந்தியா நாடாளுமன்ற 18வது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தற்போது 24 மாநிலங்களில் 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்திய குடிமகனாக எனது கடமையை நிறைவேற்றி எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். இனி வரும் காலங்களில் நூற்று நாற்பது கோடி இந்திய மக்களுக்கும் இந்தியா நாடாளுமன்றம் சரியாக செயல்படவில்லை என்றால் 543 இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகும் அனைவரையும் கேள்வி கேட்கும் உரிமையை இன்று வாக்களித்ததன் மூலமாக பெற்றுவிட்டேன். இந்திய குடிமக்களாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து அடுத்த ஐந்தாண்டுகள் உங்கள் கோரிக்கைகளை கண்டிப்பாக கேட்டு பெறுங்கள். உங்கள் வாக்கினால் நல்லவர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இன்னும் சில மணி நேரமே உள்ளது வாக்களிக்காதவர்கள் உடனடியாக உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள் மேலும் வாக்களித்துள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.