வலிமை
வெளியானது மோஷன் போஸ்டர் !, ஆரம்பமானது “வலிமை” கொண்டாட்டம் !


ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித் அவர்களின் “வலிமை” படத்தைப் பற்றிய தகவலுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர். இதனையொட்டி “வலிமை” படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் அவர்களுக்கு, விருந்து கொடுக்க முடிவு செய்துள்னர். ரசிகர்களின் பேரார்வத்தை தணிக்கும் வகையில் “வலிமை” மோஷன் போஸ்டரை, படத்தின் முதல் தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.


இன்று மாலை மோஷன் போஸ்டர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி, வைரலாக பரவி வருகிறது, இது உலகளவில் “வலிமை” படத்தின் மீதான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டும்படி அமைந்துள்ளது
“வலிமை” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் “வலிமை” திரைப்படம் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் தமிழ் படமான “வலிமை” படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் H. வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தில் மிக வலுவான தொழில்நுட்பக் குழுவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்துள்ளார். கே.கதிர் கலை இயக்கம் செய்ய, , அனு வர்தன் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், பி.ஜெயராஜ் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.