
ஜெ.துரை
மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
சென்னை மேடவாக்கத்த்தில் அமைந்துள்ள ஸ்பாட்டிஃபை என்னும் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கில் 18ஆம் முதல் 22 ஆம் தேதி வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மாணவ மாணவியர்களுக்கு மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்று வருகிறது.

இப் போட்டியில் தமிழ்நாடு தெலுங்கானா, ஆந்திரா,பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தேசிய அளவில் நடக்கவிருக்கும் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யபடுகின்றனர்.