அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்கிறார் ராஷ்மிகா மந்தண்ணா
FahadhFaasil aryasukku
ThisIsDSP resulp adityamusic PushpaMovie MythriOfficial onlynikil
పుష్ప പുഷ്പ புஷ்பா ಪುಷ್ಪ पुष्पा
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தண்ணா, படம் குறித்த தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் பகிர்ந்துள்ளார்.
“புஷ்பா மிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது. மும்முரமாக, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று கூறிய ராஷ்மிகா, “இந்த படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

“சுகுமார் சார் இயக்கம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜுன் கதாநாயகன். இதை விட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு?” என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் குறித்து ஒரே வார்த்தையில் கூறுமாறு கோரிய ரசிகருக்கு, “அவர் மிகவும் எளிமையானவர், இனிமையானவர்,” என்று ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
ஆகஸ்ட் 13 அன்று வெளியாகவுள்ள புஷ்பா, அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய படமாகும். சுகுமார் இயக்கியுள்ள இந்த அசல் ஆக்ஷன் திரில்லரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.