ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு “நினைவெல்லாம் நீயடா” படக்குழுவினர் வாழ்த்து!!








இசைஞானி இளையராஜா பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவி ஏற்க டெல்லி செல்கிறார்.
இளையராஜாவுக்கு அவர் இசையமைப்பில் உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படக்குழு சார்பில் ஆளுயுர ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, இயக்குநர் ஆதிராஜன் , நடிகர் பிரஜன், நடிகை சினாமிகா, ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி, இனண இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இசைஞானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.