ரஜினி, கமல், மம்மூட்டி ஆகியோர், ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க’ பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு மூலம் அரசுக்கு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில்,ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு சிலை வைக்கப்பட உள்ளது! பூச்சி முருகன் தகவல்!

Share the post

ரஜினி, கமல், மம்மூட்டி ஆகியோர், ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க’ பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு மூலம் அரசுக்கு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில்,
ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு சிலை வைக்கப்பட உள்ளது! பூச்சி முருகன் தகவல்!

கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம், இயக்குனர் கே.பாலச்சந்தரின் 9’ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியை, நலத்திட்ட உதவிகளுடன் நடத்தினர்.

தி.நகர் தக்கர் பாபா கலையரங்கத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழிலதிபர் விஜிபி சந்தோஷம், இயக்குனர் சரண், நடிகர்கள் பூ விலங்கு மோகன், ரமேஷ் கண்ணா, தாசரதி, மாஸ்டர் பிரபாகரன், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன், பாரதிராஜா மருத்துவமனை பிரேம் குமார், வழக்கறிஞர் ஜெகநாதன், நடன இயக்குனர் கிரிஜா ரகுராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்

பூச்சி முருகன் பேசுகையில், ரஜினி, கமல், மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்களின் கடிதத்தோடு, பாலசந்தருக்கு சிலை வைக்கும் கோரிக்கையை, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பாபு கொடுத்த கடிதம்,அரசின் பரிசீலனை முடிவில் இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்!

இயக்குனர் சரண் பேசுகையில், பாலசந்தர் வாழ்ந்த வாரண் சாலைக்கு, பாலச்சந்தர் பெயர் வைக்க, அரசுக்கு கோரிக்கை வைத்தார்!

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு, பொருளாளர் முகமது இலியாஸ், இணைச் செயலாளர்கள் கவிதாலயா பழனி, கண்ணப்பன், விக்ரமன் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினார்கள்!

மார்னிங் ஸ்டார், சேரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் லைஃப் கிரீன் சித்த மருத்துவமனை ஏற்ப்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் லைப்கீரின் சித்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கலந்துக் கொண்டு, இலவச மருத்துவ ஆலோசனைகள் அளித்தனர்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் 6,000 பேருக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டது.

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *