ராஜபீமா திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- ஆரவ் நாசர் , ஒவியா,
ஆஷிகா நெர்வால்,
யோகிபாபு, இளவரசு, யாஷிகா ஆனந்த், மதன் அருவி,
கே.எஸ்.ரவிகுமார்,
சயாஜி,ஷின்டே
ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ், பாகுபலி
பிரபாகர், ராகவன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
.
டைரக்டர் :-, நரேஷ் சம்பத்
மியூசிக் :- சைமன்.கே.சிங்
ஒளிப்பதிவு:-கே.எஸ் சதிஷ் குமார்.
தயாரிப்பாளர்கள்:-
சுராபி.பிலிம்ஸ். மோகன்,
படத்தொகுப்பு:-கோபி கிருஷ்ணா,
‘பிக் பாஸ்’ ஆரவ், தன் உடல் பலத்தால்
விலங்குகளில் மதம்
கொண்ட யானையுடன் இணைந்து நடித்துள்ளார்.
பிக் பாஸ்ல பிஸியாக இருந்த
போது‘ஓவியாவை வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ராஜபீமா.’
சிறுவனாக இருந்தபோது ராஜா தன்
அம்மாவை இழந்து மனவேதனையில் இருக்கிறான்.
அந்த சமயத்தில் அவனுக்கு கூட ஆறுதல்
தரும் விதமாக ஒரு யானையுடன் தொடர்பு ஏற்படுகிறது.
ராஜாவுக்கு யானையும், யானைக்கு ராஜாவும்
இரண்டு பேருக்கும் பிடித்துப் போக,
ராஜாவின் அப்பா
யானையை வீட்டில்
வைத்து வளர்க்க எற்பட செய்கிறார்.
யானை வளர்க்க
அதற்கான முறையை
வனத்துறையிடம் அனுமதியும் பெறுகிறார்.
யானைக்கு பீமா என்று பெயர் வைக்கிறார்கள்.
ராஜாவும் பீமாவும் இரண்டு உயிருக்கு
உயிராக பழகு காடு வனப்பகுதியில் சுற்று கிறார்கள்.
ராஜா வளர்ந்து வாலிபனாகிறான்.
ஒரு கட்டத்தில் ராஜா, யானைகளைக் கொன்று
அதன் தந்தங்கள் கடத்துபவர்களை
காட்டிலாக்கா அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறான்.
கொஞ்ச நாட்கள் பிறகு யானைக்கு. மதம் பிடித்து. இருக்குனு சொல்லி அரசு
அதிகாரிகள் பீமாயானை புத்துணர்வு முகாமுக்கு அதிரடியாக
கொண்டு, போகிறார்கள்.
ராஜா பதறியடித்துக்
கொண்டு முகாமுக்கு அனுப்பினால் பீமா
அங்கு காண இல்லை என்று தெரிகிறது.
கதை இப்படியே நகரகிறது பீமா
காணாமல் போனதற்கு தந்தங்களை கடத்துபவர்களை
சதிதான் காரணமாக இருக்கும் என்று
யோசித்தால், அப்படி ஒரு வழக்கமான கதை
என்று சொல்ல வேறொரு ரூட்டில்
வேகமா நகரகிறது திரைக்கதை.
பீமா யானை காணாமல் போனதற்கு யார்
காரணம்? காணாமல் போன பீமாவுக்கு
என்னானது? என்பதை கிளைமாக்ஸில் …
காட்சியில் இயக்கம் நரேஷ் சம்பத்
ராஜாவாக ஆரவ். மாஸ் ஹீரோவுக்கும்
அவர் யானை மீது பாசம் காட்டும் போது நெகிழ வைக்கிறது.
வில்லன்களுடன்
மோதும் ஆக்சன் காட்சிகளில் உடல் பலம்
காட்டி, காதல் காட்சிகளில்
பொருத்தமாக நடித்து கவனம் பெறுகிறார்.
ஓவியா, ஆரவுக்கு ஜோடியாக வருவார் என்று பார்த்தால்
கதையுடன் ஒரு
பாட ல் கலரான உடைகளில்
கவர்ச்சியாக ரசிக்கும்படி ஆடிகிறார்.
நடிகை ஆஷிகா நெர்வாலுக்கு சினிமாவில்
வழக்கமான ஹீரோவில்
காதலிக்கிற கதாநாயகி
வேலைதான் என்று அதை உணர்வு கச்சிதமாக செய்துள்ளார்.
ஜோதிடத்தை நம்பி எதையும் செய்யத் தயாராக இருப்பவராக,
அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு முதலமைச்சர் பதவிக்கு
ஸ்கெட்ச் போடுவதில் பல வில்லத்தனம்
கே எஸ் ரவிக்குமாருக்கு. தினமும் ஒரு நிறத்தில்
துண்டு போட்டுக் கொண்டு வலம் வருகிறார்
அவர் தன் பாத்திரத்துக்கு எற்ப
வில்லத்தனத்தில் பாஸ்மார்க் போடுகிற அளவுக்கு நடித்துள்ளார்
அமைச்சரின் வளர்ப்பு மகனாக வருகிற யோகிபாபு
‘பொள்ளாச்சியில் பிரதமர்’ என கொண்டாடப்படுகிற
அளவுக்கு காட்டுகிற பந்தா கலகலப்புக்கு
செம்மையாக
உதவுகிறது.
இளமையின் செழுமையை பங்கு போடுவதற்கு மட்டுமல்லாது .
கதையின் முக்கிய தருணங்களில்
பங்களித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.
நாயகனின் தந்தையாக நாசர், மாமாவாக அருவி மதன்,
அரசியல்வாதியாக சயாஜி ஷின்டே ஆகியோருடன் ஜெயக்குமார், கராத்தே
வெங்கடேஷ் என்பதை நடிகர்களுக்கும் கதையில் முக்கியமச் தரப்பட்டுள்ளது.
பீமாவாக வருகிற யானையின் ஒவ்வொரு
அசைவும் கண்களை உறசாகமாக்கி மனதில் இடம் பிடித்துள்ளது.
யானையைப் போற்றுகிற ‘தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே’ பாடல்
பிரபல நாட்டுப்புறப் பாடலின் நகலாக அமைந்துள்ளது.
உற்சாகமூட்ட, ‘மஞ்சனத்தி வாசத்துல’ பாடலை இதமூட்டும்
மெட்டில் தவழ விட்டிருக்கிறார்
சைமன் கே கிங். பின்னணி இசையிலிருக்கும் உழைப்பு
கதைகளத்திற்கு பரபரப்பாகிறது.
ஒளிப்பதிவு தரம். பஸ்
விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான
பாசப்பிணைப்பை
மையப்படுத்திய கதைக்களம்.
மூடநம்பிக்கை அது
இதுவென்று
விறுவிறுப்பு சங்கதிகளைக் கலந்திருப்பதால்
ராஜபீமாவுக்கு ‘யானை’யின் பலத்தை
அதிக தருவது ஸ்கூல் குழந்தைகள் காண வேண்டிய படம்.