ராஜா கிளி’ திரைப்பட விமர்சனம்

Share the post

ராஜா கிளி’ திரைப்பட விமர்சனம்

படித்தவர்கள் :- தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா சங்கர், பிரவீன்குமார்.ஜி டேனியல் அனி போப், பழ கருப்பையா, வெற்றி குமரன், அருள்தாஸ், சுவேதா ஸ்ரீம்படான், ரேஷிமா பசுபலடி, சுபா , வி.ஜெ. அன்ரூஸ், மாலிக், கிங்காங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : -உமாபதி ராமையா .

மியூசிக் : – தம்பி ராமையா சாய் தினேஷ்

தயாரிப்பாளர்கள் : – வி.ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி.

பெரும் வசதி படைத்த செல்வந்தர் முதலாளி முருகன் பக்தர் தம்பி ராமையா குப்பை தொட்டி பக்கதில் நின்றுக்கொண்டி
ருக்கும் போது

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி,

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை

அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவரை நல்லபடியா பராமரிக்கிறார்.

அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை எடுத்து படிக்கும் போது, பல தொழில்களுக்கு

சொந்தக்காரரான பெரும் செல்வந்தர் முருகப்பன் இவர் தான், என்பது தெரிய

வருகிறது. யார் அந்த முருகப்பன்?, பெரும் செல்வந்தரான இவர் இத்தகைய நிலைக்கு வர

காரணம் என்ன? என்பதை பெண்
களுக்கும்ஆண்களுக்கும்

புத்திமதி சொல்லும் விதமாக சொல்வதை தான் ‘ராஜா கிளி’.என்ற படத்தின் கதைக்களம்

மனநலம் பாதிக்கப்பட்டவராக அறிமுகமாகும் தம்பி ராமையா, அழுக்கு படிந்த கோர்ட்டுடன் அக்கத்தில் பழைய கிழிந்து பையுடன் குப்பை எடுக்கும் போது
பயத்தத் தோற்றத்துடன்

கதாபாத்திரத்தை தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் மக்களிடம்

எளிமை நடித்துள்ளார். ஆனால், முருகப்பன்

என்ற செல்வந்தராக அறிமுகமாகும் அவர் நடை, உடை, நடிப்பு என

அனைத்திலும் வித்தியாசத்தை காட்டி கவர்ந்தால், பெண்கள்‌ அவர் மீதான அன்பை கொட்டும்

போது முருகப்பன் என்ற ஆளுமையை காட்டி‌ நடித்துள்ளார்

சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம், சிறப்பாக நடித்திருக்கிறார். அதுக்கு பிறகு

முருகப்பன் என்பவர் யார்? என்பதை

பரர்வையாளர்களுக்கு விவரித்து, கடைசியில் அவருக்காக குரல்

கொடுக்கும் நல்ல மனிதராக மக்கள்

மனதில் இடம் பிடிக்கிறார்.

தம்பி ராமையாவின் மனைவியாக

நடித்திருக்கும் தீபா, சங்கர் கணவனின் வளர்ச்சியால் எத்தகைய

மகிழ்ச்சியடைகிறார் அந்த அளவுக்கு அவர்கள் மீது சந்தேகமும் வருகிறது.

வாழ்க்கையில் ஆட்டம் போட்ட மனைவிகளின் பிரதிபலிக்கும்

கதாபாத்திரத்தில் சிறப்பாய் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக

நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக

நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீம்ப்டான், காவல்துறை

அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், முருக பக்தராக‌‌ பழ

கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என

மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் பாடல்கள்

பரவாயில்லை ரகம்.தாளம்‌ பல்லவி பின்னணி

இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணி சிறப்பு.

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஆகியோர் கேமரா,

முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், பசி

மிகுந்த வாழ்க்கையையும்

எதார்த்தமாக காட்சிப்படுத்திய இருக்கிறார்கள்

செல்வந்தர் முருகப்பனின் வாழ்க்கை மூலம்

தொழில் உள்ளிட்ட பல துறைகளில் வெற்றி பெற்ற பிரபலங்களின்

இல்லங்களில் நடமாடும் சந்தேகப் பேய்களால் ஏற்படும்

பிரச்சனைகளை தனது கதை மற்றும் திரைக்கதை மூலம்

அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தம்பி ராமையா, உண்மை

சம்பவம் ஒன்றை பின்னணியாகக்

கொண்டு படத்தை கமர்ஷியலாகவும் கொடுத்திருக்கிறார்.

சபலம் மனிதனை எப்படி சறுக்கலை சந்திக்க வைக்கும் என்பதையும், பெண்களின் அவசர

புத்தியால் மனிதர்களில் புனிதர்கள் எப்படி குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள்,

என்பதையும் சினிமா பாணியில் சொல்லி, உணர்வுப்பூர்வமான

கிளைமாக்ஸ் மூலம் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாடம்

புகட்டியிருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா.

‘ராஜா கிளி’ பெண்கள் ஆண்களும் அவசியம் பார்க்க வேண்டிய குடும்பப் படம். அனைவரும் பார்க்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *