ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உலகக் கோப்பை கால்பந்து திருவிழா பற்றிய சிறப்பு நிகழ்ச்சி “GOAL கொண்டாட்டம்” .இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 16ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.




உலகக் கோப்பை வரலாறு, முன்னணி வீரர்களின் பின்னணி, அணிகள் பற்றி அலசல்கள், திருடுபோன உலகக் கோப்பைகள் என பல்வேறு தகவல்கள் சுவாரஸ்யமான முறையில் தொகுத்து வழங்கப்பட உள்ளன. 32 அணிகள், 64 போட்டிகள், மகுடம் சூடப் போவது என ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களின் நாடித்துடிப்பு என சுழன்றடிக்கவிருக்கும் கால்பந்து சூறாவளி பற்றிய தகவல்களை செய்தியாளர்கள் வேதவள்ளி மற்றும் ஆனந்தி தொகுத்து வழங்குகின்றனர் .