“வீடு”
வீடு எப்படி அனைவரின் கனவாக இருக்கிறதோ அதே போல ஒரு வீட்டின் வடிவம் எப்படியிருக்கவேண்டும் என்ற கனவும் அனைவரின் உள்ளத்திலும் இடம் பெறுவதுண்டு. அந்த கனவுகளை நிறைவு செய்யும் தளமாக இருக்கிறது “வீடு” நிகழ்ச்சி.



வாரம்தோறும் புதுவிதமான வீடுகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. வீடுகள் எப்படி கட்டப்படுகின்றன. எந்தெந்த பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன, அதன் பட்ஜெட் என்ன? அடித்தளம் முதல் கூரைவரை என்னென்ன மாற்றுப்பொருள்கள் பயன்படுத்தபடுகின்றன போன்ற முழுத் தகவல்களையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஷ்ணு பரத் விளக்கமாக விவரிக்கிறார்.


பாரம்பரிய முறையில் கட்டப்படும் வீடுகள் முதல் மாற்று முறையில் கட்டப்படும் வீடுகள் வரை என்று பலவிதமான வடிவத்தில் வீடுகள் உங்கள் பார்வைக்கு தரப்படுகின்றன. தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் சென்று வித்தியாசமான வீடுகளை தேடி நேயர்களின் பார்வைக்கு வைக்கும் வீடு நிகழ்ச்சி சனிக்கிழமைதோறும் மாலை 5:30 மணிக்கு நமது புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது.
