“புஷ்பா”
திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :-
அல்லு அர்ஜுன்,
ஃபாஹத் பாசில்,
ரஸ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பிரதாப் ரெட்டி, ஜெகபதிபாபு, ராவ் ரமேஷ், ஆடுகளம் நரேன், சுனில், தாட்சாயணி, மற்றும் பலர்.
டைரக்டர் :- சுகுமார்.
மியூசிக்:- தேவி ஸ்ரீ பிரசாத்.
ஒளிப்பதிவு:-மிரோஸ்பா குபாப்ரோ சேக்கினர்
சண்டை பயிற்சியாளர்:- பீட்டர் ஹெயன் கெச்சா கம்பக்டெ ட்ராகன் ப்ரகாஷ் மற்றும் நபகண்டாவை
தயாரிப்பாளர்கள்:-
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங் நிறுவனம்.
செம்மரக்கட்டை கடத்தல் காரன் புஷ்பராஜ்
என்கின்ற புஷ்பாவின் கதைக்களம் தான் புஷ்பா 2.
செம்மரக்கட்டை கடத்தல் தொழில் செய்யும் மாஃபியா வாக உருவெடுக்கும் புஷ்பா
ஜாப்பன் வரை சென்று தனது வியாபாரம் பார்க்கும் புஷ்பா
முதல் பாகத்தில் அவமானம் எற்படத்திய பன்வார்சிஙா தம்பி மரணத்தை பழிதீர்க்க
நினைக்கிற தாக்ஷயானி முதலியோரை புஷ்பா எப்படி எதிர்கொள்ள
போகிறார் என்ன என்பதை பதில் சொல்ல வந்துள்ளது இந்த கதைக்களம் தான்
புஷ்பா முதலமைச்சர் தன்னை அவமானம் செய்தால் பழிதீர்க்க புஷ்பா செய்யும் முயற்சி யே படத்தின் முழுகதை
படத்தில் சண்டை காட்சிகளில் அல்லு ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார் அர்ஜுன்
எமோஷன், ஆக்ஷன், அதிரடி என அனைத்தையும்
சரியான அளவு கலந்து
கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுகுமார்.
இதுல புஷ்பராஜாகவே வாழ்ந்திருக்கிறார்
அல்லு அர்ஜுன். நடிப்பில் புது உச்சத்தை தொட்டிருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். தன் நடிப்பை பற்றி
யாரும் குறை சொல்லக்கூடாது என்ற அளவுக்கு செம்மையாக நடித்திருக்கிறார்.
தன்னால் டான்ஸ் மட்டும் அல்ல மிரட்டலாக நடிக்கவும் முடியும் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்.
ஆதரவான மனைவி ஸ்ரீவள்ளியாக தனக்கு கொடுத்த நடிப்பை சரியாக பயன்
படுத்திருக்கிறார்
ரஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன்,
ரஷ்மிகா இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு மிக பெரிய பக்கபலம்.
அவர்கள் சேர்ந்து ஆடியிருக்கும் பீலிங்ஸ் பாடல் கொண்டாடப்படுகிறது.
ஃபஹத் ஃபாசில். அவர் வரும் காட்சிகளில் திரையரங்கில்
ரசிகர்களின் கண்களை எந்த பக்கம் சூழல விட முடியாமல் . ரசனையோடு ஹீரோ
அல்லு அர்ஜுனுக்கு நிகராக தன் மாஸ் நடிப்பால் டஃப்பாக நடித்திருக்கிறார்.
வில்லன் ஃபஹத் ஃபாசில்.சாரும் .
அரசியல்வாதிகளாக ஜெகபதி பாபு மற்றும் ராவ் ரமேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் பெரிய பலமாக அமைந்திருக்கிறது
தேவி ஸ்ரீ பிரசாத் இசை ரசிக்கும்படி இருக்கிறது.
பி.ஜி.எம். மற்றொரு பெரிய பலம்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளி வந்துள்ள ‘புஷ்பா 2’ அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா
முன்னணி கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார்
இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்
கிறார். ‘புஷ்பா’ திரைப்படம்
.இந்த படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான லீட்
கொடுக்கப்பட்டிருந்தது. ‘புஷ்பா 2’
படத்தில் அல்லு
அர்ஜுன் மற்றும் பகத் பாசில் ஆகியோர் மோதல்கள்
இடம்பெறும் காட்சிகள் அட்டகாசமாக இருக்கிறது.
குறிப்பாக அல்லு அர்ஜுன் மற்றும் ,ஃபகத் பாசில் இடையிலான
மோதல் காட்சிகள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கிறது.
இதே போன்று ஸ்ரீ லீலா
உடனான இஸ்க் பாடல் நடன காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
ஜப்பான் துறைமுகத்தில் முதல் பாகம் பார்த்த புஷ்பா அந்தரத்தில் கயிற்றில் தொங்கியபடி
அவரது அறிமுகம் இருக்கிறது.
போன படத்தில்
போலவே இந்த
படத்திலும் புஷ்பா மாஸ் காட்சிகளும் பார்வையாளாருக்கு
விறுவிறுப்பு தரும்படி படத்தில் வைத்துள்ளார்கள் .
புஷ்பாவின் மாஸை காட்டுவதற்காகவும். தனது ஆட்களை வெளியில் கொண்டு
செல்லும் போலீசார் தங்கள் வேலை
பறிபோகும் என்று கெஞ்சும்போது புஷ்பா
செய்யும் காரியங்களை
ரசிகர்களை கைதட்ட வைக்கும்.
அதேபோல, அல்லு
அர்ஜூனின் சண்டை காட்சிகள் சிறப்பாக
வடிவமைக்கப்
பட்டுள்ளது. செம்மரங்களை
கடத்துவதும், அதை போலீஸ் துரத்துவதும், கோயில் மற்றும்
கிளைமேக்ஸ் சண்டை காட்சி ஆக்ஷன்
படத்திற்கு ஏற்ற போல இருந்தது . பீட்டர் ஹெய்ன், கெச்சா
கம்பக்டெ, ட்ராகன் ப்ரகாஷ் மற்றும் நபகண்டாவை
இவர்களை பாராட்ட வேண்டும்.
புஷ்பா படத்தில் ஆடுபுலி ஆட்டமாகவே நகர்கிறது. இதில் புஷ்பாவே வெல்வதும்,
ஷெகாவத் தோற்பதும் தொடர்கிறது. ஈகோ
அதிகம் உள்ளவராக போலீஸ் அதிகரியாக பகத் பாசில் படத்தில்
நடித்துள்ளார். இதுவரை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு மீது எப்போதும் விமர்சனங்கள் வந்தது.
இந்த படத்தில் ராஷ்மிகா ஓரளவு நடித்துள்ளார். சாமி சாமி
என்று கணவனிடம் அன்பு காட்டும் இடத்தில் ஒரு சாதாரண
மனைவியாக அவர்
நம் கண்முன்னே தோன்றுகிறார்.
படத்தில் தனி ஆளாக தாங்கி நடித்துள்ளார்
அல்லு அர்ஜூன். முதல் பாகத்தில் உள்ளது
போல அதே உடல்மொழியை தனக்கு பின்னால் நடக்க
வேண்டியதை முடிவு செய்யும் சக்தியாக வளர்ந்து நபராக படம்
முழுக்க ஜொலிக்கிறார்.
படத்திற்கு பின்னணி
இசையும், பாடல்களும் படத்திற்கு பலமாக
அமைந்துள்ளது.
முதல் பாகத்தில் சமந்தா ம்ம்ம் சொல்றியா
பாடலுக்கு வந்தது போல இந்த படத்தில் இஸ்க்
என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடி இருக்கிறார். அல்லு
அர்ஜூன் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த விருந்தாகும் .
தமிழ், மலையாளம் என இரண்டிலும் நடிப்பு
அரக்கனாக வரும் ஃபகத் பாசிலை
இன்னும் நன்றாக நடிக்க வைத்தியிருக்கலாம் .
பிரதான வில்லனான
பாசில் அவருக்கு காவல்துறை எஸ்.பி.யான மாஸான
வில்லன் காட்சிகளும், புஷ்பாவுடன் மோதும் காட்சிகள் , ஆக்ஷன்
ஹீரோ புஷ்பா கிளைமேக்ஸ் சண்டையில் சூப்பர் ஹீரோவாக
சண்டையிடும் காட்சி மிகவும் அதிகப்படியாக இருக்கிறது
முதல் பாகத்தில் புஷ்பா கதாபாத்திரத்திற்கு
ஏற்ப அல்லு அர்ஜூன் சாமானியனாக பேசும் வசனங்கள் இந்த
பாகத்தில் குறைவு . முதல் பாதியில் முக்கிய வில்லன் சுனில், அவரது மனைவி தாட்சாயினி இந்த படத்தில் அவர்கள்
நடிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள் .
பகத் பாசில் ஒரு கட்டிடத்தை வெடிகுண்டால் வெடிக்க
வைப்பதுடன் படம் முடிகிறது. நிச்சயம் படத்தின் டைமிங்கை இன்னும் குறைவு செய்தால் படம்
இன்னும் நல்ல வந்திருக்கும்.
பகத் பாசில்
வெடிக்கவைத்தது எதை ஜப்பானுக்கு சென்ற புஷ்பா மீண்டும் நாடு
திரும்புவது எப்படி மத்திய அமைச்சர்
பிரதாப் ரெட்டிக்கும் புஷ்பாவிற்கும் நடக்கும் மோதல் என்ன. எப்படி
பழிவாங்கப் போகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ்
சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி
ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
சுகுமாருடன் இணைந்து ஸ்ரீகாந்த் விசா வசனங்கள்
எழுதியுள்ளார். தமிழில் மதன் கார்த்திக் வசனம் எழுதியுள்ளார்.
மிரோஸ்பா குபா ப்ரோ சேக்கினர் கேமரா காடு, இருள் என படம்
முழுக்க அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மீண்டும் மிரட்டும் வந்துள்ளது “புஷ்பா பாகம்”
வெள்ளி திரையரங்குகளில் காணுங்கள்…