
‘புஷ்பா 2: தி ரூல்’ டிசம்பர் 6, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணத்தையும் படக்குழு சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதை அடைய, படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘புஷ்பா2’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. படத்தின் புரோமோஷனாக வெளியான பாடல்கள் மற்றும் டீசர் என ஒவ்வொன்றும் இயற்கையாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சமீபத்தில் மாஸ் ஜாதரா டீசர், எனர்ஜிடிக்கான ‘புஷ்பா புஷ்பா’ டைட்டில் பாடல் மற்றும் ‘அங்காரன்’ காதல் பாடல் என இவை யூடியூப் பிளாட்ஃபார்மில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. நீண்ட காலத்திற்கு முதல் 10 இடங்களில் யூடியூபில் பிரபலமாக இருந்தன. மேலும், இந்தப் பாடல்கள் ரீல்ஸ் கண்டெண்ட்டாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. படம் முதலில் ஆகஸ்ட் 15, 2024 எனத் திட்டமிடப்பட்டு பின்பு வெளியீட்டுத் தேதி டிசம்பர் 6, 2024க்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை மேஸ்ட்ரோ சுகுமார் இயக்கியுள்ளார். படத்தில் ஐகான் ஸ்டார்அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.