பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் !



தமிழ் சினிமாவில் தரமான, வெற்றி படைப்புகளை தொடந்து தந்து வரும் Axess Film Factory நிறுவனம், தற்போது ஒரு அழகான ரொமான்டிக் சிங்கிள் ஆல்பத்தை தயாரித்துள்ளது. “போதையில் தள்ளாதே” எனும் இப்பாடலில் இளைஞர்களின் விருப்பமிகு இளம் திறமைகளான, பூர்னேஷ், ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ளார்கள். இசையமைப்பாளார் அருண் ராஜ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.



சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த “பேச்சிலர் டீஸரை உருவாக்கிய “பேச்சிலர்” படக்குழு தான் இப்பாடலையும் ஒன்றிணைந்து, பணியாற்றி உருவாக்கியுள்ளனர். இப்பாடலின் கருவை உருவாக்கி இயக்கியிருக்கிறார் “பேச்சிலர்” பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, M.லக்ஷ்மிதேவா கலை இயக்கம் செய்துள்ளார். தமிழனங்கு பாடல் வரிகளை எழுத,அசார் இப்பாடலுக்கு நடன அமைப்பு செய்துள்ளார்., எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக தினேஷ் பணியாற்றியுள்ளார். SS.ஶ்ரீதர் புரடக்சன் எக்ஸிக்யூட்டிவாக பணியாற்றியுள்ளார். Axess Film Factory நிறுவனம் மற்றும் Suren Studiomyth நிறுவனம் இணைந்து இப்பாடலை தயாரித்துள்ளனர்.
