புதுயுகம் தொலைக்காட்சியின் மே தின சிறப்புப் பட்டிமன்றம்
புதுயுகம் தொலைக்காட்சியின் மே தின சிறப்புப் பட்டிமன்ற படப்பிடிப்பு (25/04/23) காலை திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் (ST. JOSEPH’S FOR WOMEN) நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி மே தினத்தன்று காலை 10:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
இன்றைய இளைய சமுதாயத்திடம் உழைப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கிறதா..?குறைந்திருக்கிறதா..? எனும் தலைப்பில் நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி அவர்களை நடுவராக கொண்டு திரு. மஞ்சுநாதன், திருமதி. அன்னபாரதி, திரு. கோ.பா.ரவிக்குமார், திரு.அரக்கோணம் தினேஷ், திரு. வினோத் குமார், செல்வி நர்மதா ஆகிய நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இன்றைய இளைய சமுதாயத்திடம் உழைப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கிறது என்ற நிறைவான தீர்ப்பை நடுவர் வழங்கினார்.
அரங்கத்தில் நிறைந்திருந்த மாணவிகள் ஆர்பரித்து அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள். அண்ணா சிங்காரவேலு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக இயக்கி இருந்தார்…



