PT .SIR பிடி சார் திரைப்பட விமர்சனம்.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” படத்தை இயக்கிய
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில்
உருவாகியுள்ள படம் “பிடி சார்”. ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள
இந்த படத்தில் காஷ்மீரா பர்தேஷி, தியாகராஜன், பாக்கியராஜ், இளைய
திலகம் பிரபு,
பாண்டியராஜன், இளவரசு, முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா,
அனிகா சுரேந்திரன், தேவதர்ஷினி, வினோதினி, ஒய்ஜி
மதுவந்தி போன்ற பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்
இந்த படத்தை தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள 25வது படம் இதுவாகும்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜி கே படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
ஈரோட்டில் இயங்கி வரும் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் பிடி
வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. சிறுவயதில் இருந்தே
அவரது
அம்மா தேவதர்ஷினி ஹிப்ஹாப் ஆதியை எந்த ஒரு
பிரச்சனைக்கும் போகவிடாமல் பத்திரமாக பார்த்து வருகிறார். அவருக்கு
எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று
குறிக்கோளுடன் இருக்கிறார். இந்த சமயத்தில் அவரது
எதிர் வீட்டில்
குடியிருக்கும்
அனிகா சுரேந்திரன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.
இதற்குக் காரணம் அவர் வேலை பார்க்கும்
கல்வி நிறுவனத்தின் முதலாளி
தியாகராஜன் என்று தெரிய வருகிறது.
இடைவேளை பிறகு என்ன ஆனது?
அனிகாவின் மரணத்திற்கு உண்மையில் யார் காரணம்? என்பதே
பிடிசார் படத்தின் கதை.
ஹிப் ஹாப் ஆதி தமிழா வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
எந்தவித சண்டை சச்சவர்களுக்கும் போகாத ஒருவராக, அதே சமயம் ஒரு
பிரச்சனைக்காக
முன் நின்று குரல்
கொடுப்பாராக மாறும் இரண்டு வேறு வெறியேஷன்களை காட்டியுள்ளார்.
சண்டை காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார்.
இவரை சுற்றி நடக்கும் காமெடி காட்சிகளும் நன்றாகவே ஒர்க் ஆகி இருந்தது.
கதாநாயகி காஷ்மிராவிற்கு கதையில் முக்கிய
எதுவோ இருக்கும். என்றாலும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது அப்பாவாக வரும் பிரபு ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்.
இவர்களைத் தாண்டி நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்துள்ள தியாகராஜன் கவனத்தை ஈர்க்கிறார்.
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளார்.
மேலும் பாக்கியராஜ், இளவரசு, முனிஷ் காந்த், தேவதர்ஷினி
ஆகியோரும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
முதல் பாதையில் பள்ளியில் நடக்கும் காட்சிகள் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்தது.
இது நம்மை கதைக்குள் கொண்டு செல்கிறது. பள்ளியின் சுவரை வைத்து வரும் காட்சிகள் நன்றாக
எடுக்கப்பட்டிருந்தது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஒரு
முக்கியமான கதையை எடுத்து அதை தன் பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார், அதில்
கிட்டத்தட்ட வெற்றியும் அடைந்துள்ளார்.
பெண்களின் ஆடைகள் மீது இந்த சமுதாயத்தில்
இருக்கும் தீயவர்களின் பார்வையை மாற்ற முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர்.
ஆனால் கிளைமாக்ஸ்ல வரும் இது எத்தனை பேருக்கு
வொர்க் கவுட்டாகுமா ? என்பதைத் தெரிந்துக்கொள்ள
எதிர்ப்பார்ப்பு ஆவல்
திரைக்கதை வேகமாக சென்றாலும் பல இடங்களில் தங்களுக்கு
ஏற்றவாறு கதையை எழுதியுள்ளனர்.
அது சில இடங்களில் நம்மை படத்தை ஹிப்ஹாப்
ஆதியின் இசையில் பாடல்கள் மட்டும்
பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. படம் முடிந்து வெளியில் வந்தாலும்
அனிகா சுரேந்திரன் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நம்
மனதில் நிற்கிறார்.
2K கிட்ஸ்களை மையமாக வைத்து நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கு இந்த படம் நிச்சயம் அவர்களுக்கு இந்த படம் கனெக்ட் ஆகும்.
குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக பிடி சார் உள்ளது.
இந்த படத்தில்
அனிகா நடிப்பில் உருக வைத்துள்ளார் . கூடவே
சோகத்தை சேர்த்து கொடுத்து மறைக்கிறார் .
நடிகர் தியாக ராஜன் நீண்ட வெளிப்பிறகு நடிப்பில் ஈர்க்கிறார்.
இந்த படத்தில் காஷ்மீரா பர்தேஷி, தியாகராஜன், பாக்கியராஜ்,
இளைய திலகம் பிரபு,
பாண்டியராஜன், இளவரசு, முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா,
அனிகா சுரேந்திரன், தேவதர்ஷினி,
வினோதினி, ஒய்ஜி மதுவந்தி போன்ற பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு முக்கிய பலமா அமைந்துள்ளது . தேவதர்ஷினி, இளவரசு , இருவரின்
நடிப்பில் உண்மையான தாய் தந்தையா மனசை
விட்டு அகலமா உருக வைத்திருக்கிறார்கள் .
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் பிடி. சார்