தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்: ‘’யசோதா’ படத்தின் கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்”
கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் சினிமாத் துறையில் 40 வருடங்களாக இருக்கிறார். நேரடித் தெலுங்கு படங்கள் உட்படப் பல மொழிமாற்றம் செய்த நாற்பத்தைந்திருக்கும் மேற்பட்டப் படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார். இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார்.
யசோதா’ படம் குறித்தான சில சுவாரஸ்யமானத் தகவல்களை ஊடகத்திடம் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பகிர்ந்து இருக்கிறார். அதில் இருந்து,
‘யசோதா’ சமந்தாவின் முதல் பான் இந்தியா திரைப்படம், இது எப்படி ஆரம்பித்தது?
‘சம்மோஹனம்’ படத்திற்குப் பிறகு நான் தயாரித்திருக்கும் நேரடி படம் ’யசோதா’. என்னுடைய மாமா எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் ஆசீர்வாதம் இந்தப் படத்தில் உண்டு என நம்புகிறே. கடந்த 2020, செப்டம்பர் மாதம் 25ம் தேதி அவர் நம்மை விட்டு பிரிந்தார். அந்த சமயத்தில் நான் சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்து எஸ்.பி. சரணுக்கு ஆறுதலாக இருந்தேன். என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் செந்தில் கேட்டுக் கொண்டதற்காக ஹரி மற்றும் ஹரிஷிடம் இருந்து ‘யசோதா’ படத்தின் கதைக் கேட்டேன். தனித்துவமான இந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது. கோவையைச் சேர்ந்த சிலத் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகுதான் நானும் என் தரப்பிலிருந்து சில கருத்துகளைச் சொன்னேன்.
தமிழ்த் தயாரிப்பாளர்களிடம் சென்ற கதை உங்களிடம் வந்தது எப்படி?
நான் ஹைதராபாத் வந்தடைந்ததும், என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் என்னிடம் வந்து, இந்தப் படத்தில் இருந்து சில தமிழ் தயாரிப்பாளர்கள் பின் வாங்கி விட்டார்கள். நீங்கள் இப்போது படத்தைத் தயாரிக்க ஆர்வமாக உள்ளீர்களா எனக் கேட்டார். பின்பு, இந்தக் கதையை நான் மீண்டும் ஒருமுறை அக்டோபர் மாதத்தில் கேட்டுவிட்டு இந்தத் திரைக்கதை கேட்கும் விஷயத்தை மீண்டும் டெவலப் செய்து வரும்படி கேட்டுக் கொண்டேன். இந்தக் கதையின் உள்ளடக்கத்தைப் பார்த்து, 7-8 மாதங்கள் கழித்து மீண்டும் திரைக்கதையில் வேலை பார்த்து இன்னும் மெருகேற்றி வந்தார்கள். பிறகே, ‘புஷ்பா’ & ‘கே.ஜி.எஃப்’ படங்களின் டப்பிங் போய்க் கொண்டிருந்தது. பின்பு, சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தை பான் இந்தியா படமாக பெரிய அளவில் வெளியிட முடிவு செய்தோம்.
வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம். அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார். அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சமந்தாவின் உடல்நிலை, பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு சில நாட்கள் முன்புதான் எங்களுக்கும் தெரிய வந்தது. இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.
‘யசோதா’ படத்தின் கதை என்ன? வாடகைத் தாய் வியாபாரம் பற்றி கூற வருகிறதா?
அப்படி கிடையாது. வாடகைத் தாய்க்கு பின்னால் நடக்கும் குற்றங்களைப் பற்றி நாங்கள் சொல்ல வருகிறோம்.
நீங்கள் இதற்கு முன்பு நிறைய கதாநாயகர்களை வைத்து வித்தியாசமான கதையை முயன்று பார்த்திருக்கிறீர்கள். ஆனால், முதல் முறையாக கதாநாயகியை மையப்படுத்திய கதையை எடுத்து இருக்கிறீர்கள். எதற்காக இந்த ரிஸ்க்?
இதில் எந்தவொரு ரிஸ்க்கோ அல்லது பரிசோதனை முயற்சியோ கிடையாது. ’யசோதா’ படம் நிஜமாக என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘ஆதித்யா 369’ திரைப்படம் மூலம் நிச்சயம் உங்களை இந்தத் துறை அடுத்த 30 ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருக்கும் பாலு அங்கிள் ஒருமுறை சொல்லி இருந்தார். எனக்கு டைம் ட்ராவல் கான்செப்ட் மிகவும் பிடிக்கும். ’யசோதா’ படம் கேட்கும் அதே எண்ணம்தான் இருந்தது.
கதாநாயகியை மையப்படுத்திய படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுவதில் ரிஸ்க் இருப்பதாக நினைக்கிறீர்களா?
கதை நன்றாக இருந்தால் பார்வையாளர்கள் நிச்சயம் படத்தைக் கொண்டாடுவார்கள். முதல் முறையாக, ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பு எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் இருக்கிறேன். பட வெளியீட்டிற்கு பின்பும் அப்படியே இருப்பேன்.
‘யசோதா’வுக்காக பெரிய செட் அமைத்திருக்கிறீர்கள். ஏன்?
இந்த நாட்களில் பெரும்பாலான மருத்துவமனைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக கட்டிட அமைப்பு மற்றும் சகல வசதிகளோடு இருக்கின்றன. கொரோனாவின் மூன்றாம் அலைக்கு மத்தியில் நாங்கள் இந்தப் படத்தை நாங்கள் எடுக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் நாங்கள் மருத்துவமனையில் படமாக்கி இருந்தால் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கும். அதனால், நாங்கள் செட் அமைத்து 55 நாட்கள் படமாக்கினோம். கலை இயக்குநர் அஷோக் அற்புதமான செட்டை உருவாக்கினார்.
இந்தப் படத்தின் வசனங்கள் எப்படி இருக்கிறது?
இயக்குநர்கள் ஹரி, ஹரிஷ் இருவரும் தமிழுக்கு அறிமுகமான அளவிற்கு தெலுங்கில் பரிச்சியம் இல்லை. எனவே, மூத்த பத்திரிக்கையாளர்களான புலகம் சின்னநாராயண, டாக்டர் சல்லா பாக்கியலட்சுமி அவர்களை அறிமுகப்படுத்தினோம். சின்னநாராயணாவுடன் எனக்கு 15 வருடங்களாகப் பழக்கம். திரைப்படங்கள் குறித்து அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர்கள் படத்திற்குப் பொருத்தமான வரிகளை எழுதியுள்ளார்கள்.
சென்சார் டிப்பார்ட்மெண்ட் படத்தைப் பார்த்ததும் என்ன சொன்னார்கள்?
அவர்களுக்கும் பிடித்திருந்தது. தென்னிந்திய மக்கள் மட்டுமே இதுபோல சிந்திக்க முடியும் என பாராட்டினார்கள்.
தயாரிப்பாளர்கள் தற்போது ஃபினான்சியராகவும் நடத்தப்படுகிறார்கள், அவர்கள் பட உருவாக்கத்தில் ஈடுபடுவதில்லை என்பதையும் கேள்விப்படுகிறோம். உங்கள் கருத்து என்ன?
காலம் எல்லாவற்றையும் மாற்றும். இந்தக் கொரோனா காலத்திற்குப் பின்பு படம் எடுத்தால் அடுத்த ஒரு ஐந்தாறு மாதங்களுக்குத் தயாரிப்பாளர்கள் பயத்துடன் தான் இருக்கிறோம். எல்லா மொழிப் படங்களையும் அனைவரும் பார்க்கிறார்கள். அதனால், கதைகள் பல இங்கு கேலிகளை சந்திக்க நேரிட்டு, கலெக்ஷனும் பாதிக்கப்படுகிறது. அதனால், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்.
‘யசோதா’ படத்தின் பட்ஜெட் மிகப் பெரிய அளவில் உள்ளது. தயாரிப்பில் வேறு யாரேனும் உங்களுடன் இருந்தார்களா?
சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் இணைத் தயாரிப்பாளராக இருந்து எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.
இன்றைய நாளில் தயாரிப்பாளர்களின் குழந்தைகளும் சினிமாத் துறைக்குள் வருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து எப்படி?
என்னுடைய மகன் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் சினிமா மிகவும் பிடிக்கும். வெளிநாடிலும் சரி இங்கும் சரி தவறாமல் படங்கள் அபார்த்து விடுவார். ஆனால், அவரிடம் நான் படங்களில் நுழைய வேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்து விட்டேன்.
என்னுடைய மகள் வித்யா டிஜிட்டல் வேலை பார்த்து வருகிறார். ஸ்பாட்டிஃபையில் இருக்கிறார். ‘சம்மோஹனம்’, ‘ஜெண்டில்மேன்’ மற்றும் ‘யசோதா’ படங்களில் அவர் எனக்கு உதவியாக இருந்தார். என் மகனுக்கு சினிமா வேண்டாம் என்றேன். ஆனால், மகளுக்கு ‘உன் விருப்பம்’ என்று சொல்லி விட்டேன். அவரும் ‘என் எல்லை எனக்குத் தெரியும் அப்பா’ என்று சொன்னார். நான் ஓய்வு பெறும்போது செய்திருக்கும் வேலையில் திருப்தி அடைந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தை நீங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளீர்கள். மீண்டும் அவருடன் இணையத் திட்டம் இருக்கிறதா?
எனக்கு எப்போதுமே பாலகிருஷ்ணாவுடன் நல்ல உறவு இருக்கிறது. சமீபத்தில்தான் அவரைப் பார்த்தேன். அவர் ‘யசோதா’வின் கதையைக் கேட்டு விட்டு பாராட்டினார். என்னுடைய தயாரிப்பின் கீழ் இன்னும் பிரம்மாண்டமாக வரும் என்றார். நாங்கள் எப்போது சந்தித்தாலும் சினிமா பற்றி பேசிக் கொள்வோம். என்னுடைய எதிர்ப்பார்ப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஏற்றதுபோல யார் கதை சொன்னாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவே உள்ளேன்.