
வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்

திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ஹரிணி சுரேஷ் மற்றும் ஸ்வேதா அபிராமி நாயகிகளாக நடிக்கின்றனர். இதர நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சில பிரபல நட்சத்திரங்களும் இதில் நடிக்க உள்ளனர்.
திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாயகனான மிதுன் சக்கரவர்த்தி, “திரை உலகில் இதுவரை சொல்லப்படாத வகையில் மிகவும் புதுமையான காதல் கதையாக இது இருக்கும். சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில் உணர்ச்சிகளின் கவின்மிகு கலவையாக இந்த திரைப்படம் உருவாகும்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். படப்பிடிப்பை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.
வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இந்த திரைப்படத்திற்கு அமர்கீத் இசையமைக்க வெற்றிவேல் ஒளிப்பதிவை கையாளுகிறார். புவன் படத்தொகுப்பிற்கு பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்குநர்: பிரேம்; நடனம்: வரதா மாஸ்டர்; டிசைனர்: கிப்சன் யுகா; மேலாளர்: பெருமாள்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்.