பிர்லியன்ட் மூவிஸ் தயாரிப்பில்
‘திவ்யா மீது காதல்’
பிர்லியன்ட் மூவிஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய படைப்பு ‘திவ்யா மீது காதல்’.
இன்றைக்கு சமூகத்தில் நடக்கும் சீரழிவு சம்பங்களை தத்ரூபமாக கதைக்களமாக கொண்டு படமாக்கியுள்ளனர்.காதல்செய்யும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமையால் சீரழிக்க படுகிறார்கள்.இந்த ஆபத்தை உணராமல் தனிமையை தேடி செல்லும் ஒரு காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடுமையே இப்படம். பெற்றோர்களுக்கும்,பிள்ளைகளுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.


சினிமா சம்பந்தபடாத முற்றிலும் புதிய முகங்களை வைத்து ஒரு புது முயற்சி செய்துள்ளார் புதிய இயக்குநர் மதன். இந்த படத்தை தயாரித்து, இயக்குவதோடு இல்லாமல் கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார் மதன். நாயகியாக நிஷாஷெட்டி என்ற புதுமுகம் .

பல வெற்றி படங்களை ஒளிப்பதிவு செய்த ராஜராஜன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.இப்படத்தின் கதைக்களத்தை எதார்த்தமாக அமைத்துக் கொடுக்கிறார் கலை இயக்குநர் சக்திவேல்.இந்த படத்திற்கு J.R ஜோசப் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. இப்படத்திற்கு ‘U/A’சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இத்திரைப்படம் ஏப்ரல் 29 அன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.



தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, திரைகதை, வசனம் இயக்கம் – மதன்
ஒளிப்பதிவு – ராஜராஜன்
இசை – J.R ஜோசப்
கலை – சக்திவேல்
மக்கள் தொடர்பு – செல்வரகு













