டாடா பிளே வழங்கும்
ரூ.3000-க்கு தவிர்க்கக்கூடாத சிறப்பு சலுகை: புதிய சந்தாதாரர்களுக்கு இலவச டிடீஹெச் இணைப்பு கிடைக்கும்
~ரூ.3000-க்கு இப்போது ரீசார்ஜ் செய்து, டாடா பிளே – ன் அனைத்து ஆதாயங்களையும் பார்வையாளர்கள் பெறலாம் ~
இந்தியாவில் டைரக்ட் டு ஹோம் துறையில் முதலிடம் வகிக்கும் டாடா பிளே, இந்த திருவிழா சீசனுக்காக சிறந்த சலுகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. பணத்திற்கு மிகப்பெரிய மதிப்பை வழங்கும் இந்த சலுகைத் திட்டம், சாமான்ய மக்களும் பயனடையும் வகையில் எளிதான கட்டணத்தில், சிறப்பான பொழுதுபோக்கை வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தமாக்கா சலுகை திட்டமானது, ஒரு புதிய இணைப்பை முற்றிலும் இலவசமாகப் பெறுவதன் மூலம் டாடா பிளே – ன் அனைத்து ஆதாயங்களையும் அனுபவித்து மகிழ புதிய பயனாளிகளை அனுமதிக்கும். ரூ.3000 என்ற தொகையை மட்டும் செலுத்துவதற்கு வகை செய்யும் இப்புதிய திட்டம், இலவச டிடீஹெச் இணைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அத்துடன், செலுத்திய ரூ.3000 என்ற ஒட்டுமொத்த தொகையும் அவர்களது கணக்கில் திரும்பவும் வரவு வைக்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் அவர்களது சந்தாவுக்கு ரீசார்ஜ் செய்யவும் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளைப் பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இச்சலுகைத் திட்டம், இத்துறையில் இதுவரை வழங்கப்படாத புதுமையான திட்டமாகும். நுகர்வோர்களுக்கு, குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மதிப்புமிக்க சேவைகளையும் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சிக்கனமான செலவில் சிறப்பான பொழுதுபோக்கு வாய்ப்பினை வழங்கவும் வேண்டுமென்பதே டாடா பிளே – ன் இந்த முயற்சியின் பின்புல குறிக்கோளாகும். பிசினஸ் செயல்பாடுகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படையான விதத்தில் மேற்கொள்ளும் டாடா பிளே – ன் செயல் நடவடிக்கையை இது வலியுறுத்துகிறது. எளிய கட்டணங்களை கொண்ட திட்டங்களைப் பயன்படுத்தி, ஆதாயங்களைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களை திறனதிகாரம் பெற்றவர்களாக உயர்த்துவதே டாடா பிளே – ன் நோக்கமாகும்.
தங்களது புதிய GSAT-24 செயற்கை கோளின் வழியாக சேவை தொடங்கப்பட்டிருப்பதை டாடா பிளே சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுவரை இருந்ததை விட இன்னும் சிறப்பான, மிக துல்லியமான தரத்தில் நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் மக்கள் கண்டு ரசிப்பதை இது சாத்தியமாக்கியிருக்கிறது. அதிகரிக்கப்பட்டிருக்கும் அலைக்கற்றை, 50% கூடுதல் சேனல்களை ஒளிபரப்பவும் மற்றும் நாட்டின் தொலைதூரத்திலுள்ள பகுதிகளுக்கும் சிக்னல்களை அனுப்பவும் டாடா பிளே நிறுவனத்தை ஏதுவாக்குகிறது.