கலைஞர் தொலைக்காட்சியில் பிரபுதேவாவின் “பொய்க்கால் குதிரை”

கலைஞர் தொலைக்காட்சியில், விடுமுறை தினமான ஆயுத பூஜை சிறப்பு தினத்தை முன்னிட்டு பிரபுதேவா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “பொய்க்கால் குதிரை” சிறப்பு திரைப்படம் வரும் அக்டோபர் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் தந்தை – மகளுக்கிடையேயான பாசப் போராட்டத்தை மையப்படுத்திய இந்த படத்தில், மகளின் உயிரை காப்பாற்றப் போராடும் ஒற்றைக் கால் தந்தையாக பிரபுதேவா நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், பேபி ஆழியா, பிரகாஷ் ராஜ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், அக்டோபர்- 4 மாலை 6.30 மணிக்குவிக்ரம், துருவ் விக்ரம் முதல்முறையாக இணைந்து நடித்து அசத்திய “மகான்” சூப்பர்ஹிட் திரைப்படமும், திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு பட்டிமன்றமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்டோபர் -5 விஜயதசமியன்று, காலை 9:00 மணிக்கு ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்யா, சுந்தர்.சி நடிப்பில் “அரண்மணை 3” திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.