“வல்லமை”திரைப்பட விமர்சனம்…

Share the post
Image

“வல்லமை”திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
பிரேம்ஜி, திவதர்ஷினி, தீபா சங்கர், வழக்கு எண்.முத்துராமன, சி.
ஆர்.ரஜித், சூப்பர் குட்

சுப்ரமணி, சிவகுமார். சுப்ரமணியன் மாதவன், விது, திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – கருப்பையா முருகன் .

மியூசிக்:- ஜி.கே.வி.

ஒளிப்பதிவு :- சூரஜ் நல்லுசாமி.

படத்தொகுப்பு:-சி.
கணேஷ்குமார்.

தயாரிப்பாளர்கள் : பேட்லர்ஸ் சினிமா- கருப்பையா முருகன்.

தனது மனைவியை இறந்த பிறகு ஏழை விவசாயி பிரேம்ஜி, தனது மகளை

நல்ல படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே

சென்னைக்கு வருகிறார். ஒரு சிறிய வாடகை வீடு, எடுத்து தனது வேலையையும், மகளின் பள்ளி படிப்பு என்று

அனைத்தும் அவர் நினைத்து போல் நடந்து வருகிறது இதற்கிடையே திடீரென்று

மகளின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட தொடர்பாக ஒரு பெண் மருத்துவரை

சந்திக்கும் போது, சிறுமி அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு

ஆளாக்கப்பட்டி
ருக்கிறாள்.என்பதை தெரிய வருகிறது. தனக்கு ஏற்பட்ட அநீதியை இனி

யாருக்கும் நடக்க கூடாது, என்று எண்ணுகிறாள் சிறுமி,

தன்னை இதுபோன்ற சீரழித்த குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து.

அவனைக் கொலை செய்ய வேண்டுமென்று என்ற முடிவுக்கு வருகிறாள்.

தனது மகளின் இந்த மனநிலையை புரிந்துக் கொள்ளும் தந்தை பிரேம்ஜி,

குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும், என்று

அவனை எப்படியும் கொலை செய்ய வேண்டும். என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்.

சாமானிய மனிதர்களின் அசாத்தியமான இந்த முயற்சி வெற்றி பெற்றதா?

இல்லையா? என்பதை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்

குழந்தைகளின் குமுறலாகவும், கோபமாகவும்

சொல்வதே இந்த கதைக்களம். “வல்லமை”.

பிரேம்ஜி நன்றாக நடித்திருக்கிறாரா? என்று பார்ப்பதை விட, இப்படி ஒரு

கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருப்பதையே பாராட்டலாம். தனக்கு காது‌ கேட்காது என்பதால் காது ஹெட்செட் போட்டுக் கொண்டு எதார்த்தமா நடித்துள்ளார்.ஏதோ வந்தோம், நடித்தோம் என்று

கை காலையை ஆட்டி நடித்தோம். அசைத்தோம், என்று இல்லாமல், சுயமாய்

வசனங்கள், பேசி பல ரியாக்‌ஷன்கள் செய்து என்று இல்லாமல்

உணர்வுப்பூர்வமாக நடிக்க கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மனுஷன் நடிக்க முயற்சித்துள்ளார்

பிரேம்ஜி. அவரது முயற்சியை தாராளமாக பாராட்டி வரவேற்கலாம்.

சின்ன சின்ன சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, தனக்கு நேர்ந்த அநீதிக்கு

பழிதீர்ப்பதற்கு எடுத்த முடிவு அதிர்ச்சியளித்தாலும்

தன் குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை

சொல்லும் போது, பார்வையாளர்களின் இதயம் ஒரு கனக்கச் செய்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளவர்

’வழக்கு எண்’ முத்துராமன், போலீஸ் கான்ஸ்டபிளாக

நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக நடித்திருக்கும்

சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக நடித்திருக்கும் சுப்பிரமணியன்

மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக நடித்திருக்கும் விது, பள்ளி உதவி

பணியாளராக நடித்திருக்கும் திலீபன் என அனைவரும் கதாபாத்திரங்
களுக்கு

சட்டபொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.கே.வி மற்றும் ஒளிப்பதிவாளர்

சூரஜ் நல்லுசாமி இருவரும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு

மற்றும் இசை இரண்டுமே எளிமையாக பயணித்தாலும்,

கதை மற்றும் திரைக்கதையில் உள்ள

இருக்கத்தையும், உணர்வுகளையும்

சிதைக்காமல் சூப்பராக நேர்த்தியாக பயணிக்க வைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் சி.கணேஷ் குமார், தன்னால் முடிந்த

வரை இயக்குநர் சொல்ல நினைத்ததை சுறுக்கமாகவும், சுவாரஸ்யமாகவும்

சொல்ல முயற்சித்து 2 இரண்டு மணி நேரத்திற்கு குறைவாக படத்தின் நீளத்தை

குறைத்திருந்தாலும், காட்சிகளின் நீளத்தை

குறைத்திருக்கலாம், என்று எண்ண தோன்றுகின்றது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும்

கருப்பையா முருகன், பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும்

தற்போதைய காலக்கட்டத்தின்

அவலத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் பிள்ளைகள் பற்றி

செய்திகளாக மட்டுமே கடந்து போகும் இந்த சமூகத்திற்கு, பாதிக்கப்படும்

பிள்ளைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவிக்கும் வலியை பார்வையாளர்களிடம்

சேர்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்போது சமூகத்தில் நடக்கும் அவலத்தை,

திரைப்பட மொழியில் சற்று சுவாரஸ்யமாக சொல்ல

முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கருப்பையா முருகனின்

கதைக்கரு பலம் வாய்ந்ததாக இருந்தாலும்,

அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் பலவீனமாக

இருப்பதாலும், இது சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

மொத்தமாக,
பார்த்தால் ‘வல்லமை’ பாலியல்

வன்முறையின் உச்சம் பெண்குழந்தை
களுக்கு‌ எற்படும்

அநீதி இதை சட்டம் தான் பதிலளிக்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *