“முந்தி முந்தி விளையாடு”
புதுயுகம் தொலைக்காட்சியில் திரையுலக இளம் கதாநாயக, கதாநாயகர்கள் பங்கு பெரும் “முந்தி முந்தி விளையாடு” – கேம் ஷோ பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது . இந்த நிகழ்ச்சி புதுமுக இளஞ்சோடிகள் பங்கேற்கும் கலகலப்பான கேள்வி பதில்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ளது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் காலை 9:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ மற்றும் கிருத்திகா தொகுத்து வழங்குகின்றனர் .


