ஜெ.துரை
பீஸ்ஸா-3 தி மம்மி திரைவிமர்சனம்
மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கௌரவ் நாராயணன், அபிஷேக் சங்கர், காளி வெங்கட், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்து வெளி வந்த திரைப்படம் பீஸ்ஸா 3
சென்னையில் புதிதாக ஒரு உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் நலன் (அஸ்வின்)அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் மம்மி பொம்மையை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார்
இதன் பின்னர் அங்கே தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன இது ஒருபுறம் இருக்க பேய்களிடம் பேசும் மொபைல் ஆப் தயாரிக்கும் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் அவரின் காதலியாக நடித்துள்ள பவித்ரா
மாரிமுத்து
போலீஸ் அதிகாரியாக வரும் நாயகியின் அண்ணன் (கௌரவ் நாராயணன்) இவர்களது காதலுக்கு எதிரியாக இருக்கிறார் இந்நிலையில் நாயகனைச் சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பிக்கிறது
அது ஏன் நடக்கிறது? அதற்கு காரணம் என்ன? என்பதைத் திகிலாக சொல்லியிருப்பது தான் ‘பீட்ஸா 3 – தி மம்மி’ படத்தின் கதை
நாயகி பவித்ரா மாரிமுத்துவின் சகோதரர் போலீஸ் அதிகாரியாக வரும் கௌரவ் நாராயணனின் கோபமான வசன உச்சரிப்பு
உணவக ஊழியராக வரும் காளி வெங்கட் நாயகனுக்கு ஆறுதல் கூறுவது போன்ற காட்சிகள் அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது
இரண்டாம் பாதியில் அனுபமா குமார் பாசமான தாயாகவும் கொடுமையைக் கண்டு கதறும் உணர்வுபூர்வமான காட்சியிலும் சிறப்பான நடிப்பினைக் காட்டியுள்ளார்
இவரது மகளாக வரும் அபி நக்ஷத்ரவும் தனக்கு கொடுப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்துள்ளார்
வில்லனாக வரும் கவிதா பாரதி தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கேற்றார் போல் நடித்துள்ளார்
திகில் கதைக்கேற்றவாரு ஒரு மம்மி பொம்மையை வைத்து மிரட்டியுள்ளார் இயக்குநர் மோகன் கோவிந்த்
பேய் பழிவாங்கும் காட்சிகள் கதவு திறப்பது சவுண்ட் கொடுப்பது பேய் திடீரென வந்து முன்னால் நிற்பது என்று ஒவ்வொரு காட்சிளும் நம்மை மிரள வைக்கிறது
இதற்கு நடுவில் திரும்ப திரும்ப காட்டப்படும் சிவப்பு இனிப்பும் அதை பேய் சமைப்பது போன்ற காட்சிகளும் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது கதை ஆரம்பிக்கும் முன்னர் கூடைப் பந்தை வைத்து கொலை செய்யும் ஒரு காட்சி வைக்கப்பட்டு இருந்தது அடுத்த காட்சி
பேய் இருக்கிறதா இல்லையா? என்ற நியூஸ் டிபேட் காட்சிகள் முதற் கொண்டு முடிவு வரை திகில் நிறைந்த காட்சிகள் தான்
பிளாஷ் பேக்கில் குழந்தைகள் மேல் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் குறித்த பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள்
இப்பிரச்சனையின் தீவிரத் தன்மையை மையப்படுத்திச் சமூகத்திடம் விவாதங்களை மையபடுத்தி
தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பழிவாங்கும் பேய்
நாயகனுக்கு தொடர்புள்ள நபர்களையும் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்படும் இரட்டை கொலைகள் பற்றி ஏன் கொலை செய்ய பட்டார்கள் என்று நாயகனிடம் எடுத்துரைக்கிறது காட்சிக்கு காட்சி சுவாரசியமாக உள்ளது
திகில் நிறைந்த இருள் காட்சிகளாக காட்சிபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்
அருண் ராஜின் பின்னணி இசை காட்சிக்கு காட்சி சிறப்பு சேர்த்துள்ளது
மொத்தத்தில் பீஸ்ஸா-3 தி மம்மி ஒரு திகில் நிறைந்த அனுபவத்தை தருகிறது