கூழாங்கல்’ திரை விமர்சனம் !!
ரவுடி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில்
பி.எஸ்.வினோத்ராஜ்
இயக்கி கருத்தடையான், செல்லப்பாண்டி நடிப்பில் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும்வந்திருக்கும் படம் கூழாங்கல்.
அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோரது தயாரிப்பில், பல சர்வதேச விருதுகளை வென்றதோடு, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் ‘கூழாங்கல்’.
தந்தை மற்றும் மகன் இருவருடைய நடைப்பயணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவின் தற்போதைய உண்மை நிலையையும், பெருமான்மை மக்களின் நலிவடைந்த வாழ்க்கையையும் அப்பட்டமாக சொல்லியிருப்பதோடு, பல்வேறு பிரச்சனைகளை காட்சி மொழியில் பேசியிருப்பது தான் ‘கூழாங்கல்’ படத்தின் கதை.
கொலை வெறியோடு பேருந்தில் பயணிக்க இருந்த தந்தையின் கோபத்தை புரிந்துக்கொள்ளும் சிறுவன், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பொட்டல் காட்டில் நெடுந்தூரம் நடக்க வைத்து, சூரிய வெப்பத்தின் மூலம் அவருக்குள் இருக்கும் வெப்பத்தை தணிய வைக்கிறார். இவர்களுடைய இந்த சூடான நடைப்பயணத்தில், பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வியலை மிக அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறது இந்த ‘கூழாங்கல்’ திரைப்படம்.
நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் தண்ணீர் இல்லாமல் திண்டாடும் அதிர்ச்சிகரமான உண்மையை அமைதியாக சொல்லியிருந்தாலும், படம் பார்ப்பவர்களின் ஆழ் மனதில் பதியும் வகையில் அந்த காட்சிகள் கையாளப்பட்டுள்ளது.
தந்தை வேடத்தில் நடித்திருக்கும் கருத்துடையான், மண்ணின் மைந்தனாக எதார்த்தமான நடிப்பால் கணபதியாகவே வாழ்ந்திருக்கிறார். தனது நடையில் கூட அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
எந்த படமாக இருந்தாலும் எப்போது இடைவேளை வரும் என்று நேரத்தை பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயம், இடைவேளை என்பதையே மறந்துவிடுவார்கள், அந்த அளவுக்கு படம் நம்மை மகுடிக்கு ஆடும் பாம்பாக மாற்றிவிடுகிறது.
மொத்தத்தில், இந்த ‘கூழாங்கல்’ சினிமா தாகம் கொண்டவர்களுக்கு ஏற்ற படம்.