
தளபதி அவர்களின் 31-வது ஆண்டு திரையுலக கலைபயணத்தை முன்னிட்டு.!
விழுப்புரம் மாவட்ட வானூர் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திரு.நிரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில்,
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தூய்மை பணியாளர்கள் 30 நபர்களுக்கு ரெயின் கோட், புடவை மற்றும் 5கிலோ அரிசி பைகளும், பெண்கள் 350 நபர்களுக்கு புடவை மற்றும் 5 கிலோ அரிசி பைகளும், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா போன்ற உபகரணங்கள், பொதுமக்கள் 400 நபர்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைவர் குஷி.N.மோகன் முன்னிலை வகித்தார்.!
மேலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் திரு.S.சக்திவேல்,கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.K.மோகன், விழுப்புரம் மாவட்ட துணை தலைவர் திரு.வடிவேல், வானூர் ஒன்றிய தலைவர் திரு.P.முருகையன், கோட்டக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் திருமதி.கவுஸ் மற்றும் விழுப்புரம் & கள்ளக்குறிச்சி ஒன்றியம், நகர, பகுதி, கிளை மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.!