தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

Share the post

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி,நீலிமாஇசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்,
இப்படத்தைப்பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும் போது பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள் ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள் என்றவர் மற்றொரு விசயத்தை பகிர்கிறார், நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் தொட்டாசினுங்கி, அந்த படத்தில் தான் தேவயானியும் கதாநாயகியாக அறிமுகமானார், பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது, குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் நிழற்குடை UA சான்றிதழ் பெற்றுள்ளது இதன் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை கஃபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தமிழ் நாடு புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனமும் பெற்றுள்ளன,
உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது. தொழில் நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு தர்ஷன் பிலிம்ஸ்
ஜோதிசிவா
கதை திரைக்கதை இயக்கம்
சிவா ஆறுமுகம்
வசனம்
ஹிமேஷ்பாலா, இசை நரேன் பாலகுமார்
கலை இயக்கம்
விஜய் ஆனந்த்
படத்தொகுப்பு ரோலக்ஸ் ஒளிப்பதிவு
ஆர் பி குருதேவ்
மக்கள் தொடர்பு A ஜான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *