நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்‌ திரைப்பட விமர்சனம்…

Share the post

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்‌ திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்-
பவிஷ் நாராயண்,
அனிகா சுரேந்திரன்,
மேத்யூ தாமஸ்,

பிரியா பி.வாரியர்,
வெங்கடேஷ் மேனன்,

ரம்யா ரங்கநாதன்,
சித்தார்தா ஷங்கர்,

ராபியா கதூன்,
ஆர் சரத்குமார்,

சரண்யா பொன்வண்ணன்,
ஆடுகளம் நரேன்,
உதய் மகேஷ் ஸ்ரீதேவி

மற்றும் படக்குழு
வினர்கள் நடித்துள்ளனர்…

எழுத்து மற்றும் இயக்கம் :- தனுஷ்

தயாரிப்பாளர்கள்.
கஸ்தூரி ராஜா & விஜயலக்ஷ்மி கஸ்தூரி ராஜா

தயாரிப்பு நிறுவனம்
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

இசை
GV பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு
லியான் பிரிட்டோ

படத்தொகுப்பு
பிரசன்னா GK

கலை இயக்கம்
ஜாக்கி

நடன இயக்கம்:-
பாபா பாஸ்கர்

ஆடை வடிவமைப்பு:-
காவ்யா ஸ்ரீராம் நாகு

படத்தொகுப்பு:-
பிரசன்னா GK

ஆடைவடிவமைப்பு
காவ்யாராம்.

ஒப்பனை:-பி.ராஜா

முருகன் படங்கள்
கபிலன் செல்லையா

விளம்பர வடிவமைப்பு :-
ஸிங்க் சினிமா

ஒலி வடிவமைப்பு
D. ரமேஷ் குச்சிராயர்

தயாரிப்பு நிர்வாகி
ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன்.

மக்கள் தொடர்பு:-
ரியாஸ் K அஹ்மத் பாரஸ் ரியாஸ்

இந்த திரைப் படத்தின் கதைக்களத்தின் திரைப்பட விமர்சனம்…

படத் தொடக்கம் முதல் படத்தில் காதல் தோல்வி பற்றிய பாடலுடன் தொடங்கிறது.

கதாநாயகன் பவிஷ் தனது வருங்கால காதலியிடம் பிரியா வாரியர் தன் முதல் காதல் தோல்வியை

பற்றி, சொல்ல காதலியும் தனது காதலை பற்றி சொல்ல துவங்குகிறார்.

கதாநாயகன் ஓட்டல் செஃப் தொழிலை ஆர்வத்துடன் படித்து வரும் காலங்களில் கதாநாயகன்.

கதாநாயகி நிலாவை அனிகாவை

சந்திக்கிறான். இருவருக்கும் இடையே இருந்த காதல் மலர்கிறது. இந்த விஷயத்தை பற்றி

தனது வீட்டில் இருவரும் சொல்கிறார்கள்.

பவிஷ் வீட்டில் தனது மகனின் விருப்பத்திற்கு பச்சை கொடி க்ரீன் சிக்னல் வீட்டில்

கிடைக்கிறது, நிலாவின் வீட்டில் அவரது தந்தை சரத்குமார், பவிஷுக்கு நோ என்று சொல்லி விடுகிறார்.

ஆனாலும், நிலா தனது வாழ்க்கை துணை
பவிஷ் தான் என்று உறுதியாக இருக்கிறார்,

பவிஷ் எப்படிப்பட்டவன் என்பதை பழகி பார்க்க

வேண்டுமென சரத்குமார் நினைச்சி பார்க்கிறார்.

தனது மகளின் விருப்பத்திற்காகவே பவிஷுடன் பழகி

பார்க்கும் சரத்குமார், அவனைப்பற்றி வெறுப்பை மட்டும் தான் காட்டுக்கிறார்.

பவிஷ் டூ சரத்குமார் என்பது போல் செல்லும், கட்டத்தில் தனது காதலியின் தந்தை சரத்குமாருக்கு புற்றுநோய் இருப்பதை

பவிஷுக்கு தெரிகிறது.
கடைசியில் காலத்தில் அவரது ஆசை போலவே

அவருடைய மகளின் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதால்,

நிலாவைவிட்டு விலகவேண்டுமென பவிஷ் தீர்மானிக்கிறார்.

பவிஷ் – நிலாவின் காதலுடைய, அடுத்து ஆறு மாதத்தில்

நிலாவிற்கு வேறொருடன் திருமணம் நடைபெறுகிறது.

இந்த திருமணத்திற்கு பவிஷ். செல்கிறார்,

அதன்பின் என்ன நடந்தது, நிலாவும் பவிஷும்

சேர்ந்து வாழ்ந்தார்களா இல்லையா..? என்பதை படத்தின் மீதி கதை. இயக்குநர் தனுஷ் மீண்டும் சிறந்த

திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

சில இடங்களில் தொய்வு இருந்தாலும்,

அதனால் படத்தில் பெரிதாக தெரியவில்லை .

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிக்கும் படியாக இந்த காலத்து எற்ப

இளைஞர்களை கவரும் வகையிலும் அமைத்துள்ளார் இயக்குநர் தனுஷ்.

கதாநாயகன் கதாநாயகியை, அடுத்து அனைவரையும் கவர்ந்த

ஒரு கதாபாத்திரம் இருந்தால், அதுல மேத்யூ தாமஸ் நடித்த ராஜேஷ்

கதாபாத்திரம் தான்.
கதாநாயகனின் உயிர் நண்பனாக நடித்து,

நம்ம உயிர் நண்பனை நினைவுப்படுக்கிறார். நகைச்சுவை

காட்சிகளில் வேற மாதிரி லெவல் பர்ஃபார்மென்ஸ்.

சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், ஆகியோரின் அனுபவ நடிப்பு இந்த திரைப்

படத்திற்கு பெரிய பலம்.
வழக்கமான காதல் கதை என்று கூற இந்தப்படத்தை தனுஷ் அடையாளப்படுத்தி இருந்தாலும் கூட, சற்று வித்தியாசமான காதல்

கதையாக தெரிந்தது. ஆனால், நகைச்சுவை காட்சி ஒர்கவுட் ஆனதுபோல், எமோஷனல்

காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு பெரிதாக மனசை கொஞ்சம்

தொட்டுவிட்டுபோகிறது. இந்தபடத்திற்கு இது ஒரு மைனஸாக தெரிவில்லை.

அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் இதற்கு முன் திரையில்
பார்த்திருக்கிறோம்.

ஆனால், பவிஷ், ரப்பியா கத்தூண், வெங்கடேஷ் மேனன், ரம்யா

ரங்கநாதன் ஆகியோர் அறிமுகப் படத்திலேயே தங்களால் முடிந்த அளவுக்கு பெஸ்ட்டா

கொடுத்துள்ளனர். அதற்கு பாராட்டு.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பாடல்கள் காட்சிகளை ஒளிப்பதிவு

மற்றும் கலை இயக்கம் அழகாக மிக அழகாக காட்டியிருக்கிறார்கள்.

பிளஸ் நடிகர்களின் நடிப்பு தனுஷின் இயக்கம், திரைக்கதை

பின்னணி இசை, பாடல்கள் நகைச்சுவை

கடைசி‌ காட்சிகள்
கிளைமாக்ஸ்
மைனஸ் பாயிண்ட்ஸ்.

மனசின் தொடர்ந்து எமோஷனல் காட்சிகள்

வருகிறது. “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” கதாநாயகனை

தனி ஒருவனாக காட்டி மனதை பிசைய செய்தது. மிக பெரிய

கோபம் இந்த திரைப்படத்தை காதலில் தோல்வியுற்ற

கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டிய இந்த காதலும் கடந்து போகும்

என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் தனுஷ். என்றது ஒரு நாள் காதல் நிச்சயம் வெற்றி பெற்று வெற்றி பெரும் கவலை படாதே சகோதரா

திரைப்படத்தை ஜாலியா பார்த்து மகிழ்லாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *