நிலா மதாப் பாண்டா இந்தியாவின் முதலாவதான க்ளை-ஃபை எனும் உலக வெப்பமயமாதல் பற்றிய பரபரப்பூட்டும் தொடரான ‘தி ஜெங்கபுரு கர்ஸ்’-ஐ வெளியிட உள்ளார். இத்தொடர், ஆகஸ்ட் 9 முதல் சோனி LIV-இல் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது
சர்வதேச அளவில் பாராட்டப்படுபவரும் மற்றும் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான நிலா மதாப் பாண்டா, இந்தியாவின் முதலாவதான க்ளை-ஃபை எனும் உலக வெப்பமயமாதல் பற்றிய பரபரப்பூட்டும் தொடரான தி ஜெங்காபுரு கர்ஸ்-ஐ வெளியிடயுள்ளார். இத்தொடர் ஆகஸ்ட் 9 முதல் சோனி LIV-இல் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ளது. ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடைபெறும் இந்த காட்சிகள் லண்டனைச் சேர்ந்த நிதி பகுப்பாய்வாளர் பிரியா தாஸின் கதையைப் பின்தொடர்கிறது. அவளது தந்தை, பேராசிரியர் தாஸ், சந்தேகத்திற்கிடமான முறையில் காணாமல் போனதால், பிரியா மீண்டும் ஒடிசா-வுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவள் அவரைத் தேடத் தொடங்குகையில், பூர்வீக போண்டியா பழங்குடியினருக்கும் சுரங்க மாநிலமான ஒடிசாவிற்கும் இடையே ஒரு சாத்தியமில்லாத தொடர்பை வெளிப்படுத்தும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் ஒவ்வொன்றாகத் தொடர்கின்றன. நிலா மதாப்-இன் அறிமுக OTT வெளியீடான இந்த ஜெங்கபுரு கர்ஸ், இயற்கையின் மீதான மனிதகுலத்தின் முடிவில்லாத தேவைகளால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளைப் பற்றி ஆராய்கிறது.
ஸ்டுடியோ நெக்ஸ்ட்-இன் தயாரிப்பில், தி ஜெங்கபுரு கர்ஸ்-ஐ நிலா மதாப் பாண்டா உருவாக்கி இயக்குகிறார். இத்தொடரை மயங்க் திவாரி எழுதி, பாலோ பெரெஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அலோகானந்தா தாஸ்குப்தா இசை அமைப்பாளராகவும் மற்றும் துர்கா பிரசாத் மொஹபத்ரா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். ஜபீன் மெர்ச்சண்ட் எடிட் செய்யும் இத்தொடரில் ஃபரியா அப்துல்லா, நாசர், மகரந்த் தேஷ்பாண்டே, சுதேவ் நாயர், தீபக் சம்பத் மற்றும் ஹிதேஷ் டேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நிகழ்ச்சியைப் பற்றி, படைப்பாளியும் இயக்குனருமான நிலா மதாப் பாண்டா கூறுகையில், “ஜெங்கபுரு கர்ஸ் என்பது முதலாவதான இந்திய க்ளை-ஃபை த்ரில்லர் தொடராகும். இத்தொடர் மனிதகுலம் இயற்கை வளங்களை இடைவிடாமல் தேடியலைவதால் ஏற்படும் விரும்பத்தகாத பின்விளைவுகளைப் பற்றி ஆராய்வதுடன், அவற்றைத் தொடர்ந்து ஏற்படும் அபாய விளைவுகளையும் வெளிப்படுத்துகிறது. ஜெங்கபுரு மூலம், பார்வையாளர்களை மகிழ்விப்பதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் கடும் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கமாகும். திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினரை ஒன்றிணைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்வதுடன், பார்வையாளர்கள் எங்களுடன் இந்த பரபரப்பான சிலிர்ப்பூட்டும் அனுபத்தைப் பெற மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
ஜெங்காபுரு கர்ஸ், ஆகஸ்ட் 9 முதல் சோனி LIV-இல் மட்டுமே ஒளிபரப்பாகிறது.