நாயகன்”- திரைவிமர்சனம் !

Share the post

“‘…

“நாயகன்” திரைவிமர்சனம்…

நடித்தவர்கள் : –
கமல் ஹாசன், சரண்யா, நிழல்கள்

ரவி, நாசர், ஜனகராஜ், கார்த்திகா, டில்லி கணேஷ்.மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மியூசிக் : இளையராஜா

டைரக்டர் : –
மணி ரத்னம்.

தயாரிப்பாளர்:-
முக்தா பிலிம்ஸ்

தமிழ் உலக சினிமா ரசிகர்களால் மிகவும் பாராட்டப் பெற்று தந்த ரசிகர்கள் பார்த்து

ரசித்த திரைப்படம் என்று சொன்னால் அது கமலஹாசன் நடித்த “நாயகன்”

இந்திய சினிமாவை உலக அரங்கில் எடுத்துச் சென்ற

திரைப்படம் என்றும் சொல்லலாம் அப்படிப்பட்ட இந்த

படத்தை மறுபடியும் திரையரங்குகளில் ரீலீஸ் செய்துள்ளார்கள்.

இன்றைய காலகட்டத்தில் நமது சமுதாயத்திற்கும்

மிகவும் முக்கியமான சினிமா ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கு நிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய

விருந்தாக அமையும் இந்த‌‌ டிஜிட்டல் முறையில்

தொழில்நுட்பம் மிக அற்புதமாக செய்து இந்த படத்தை

கொடுத்திருக்கிறார்
கள் இந்த குழுவை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

இசைஞானி இளையராஜாவின் நாநூறுவது படம் என்பது

குறிப்பிடவேண்டும் வேண்டிய விஷயம்
இந்த படம் ஒரிஜினல் ரிலீஸ் சமயத்தில்

அந்தளவுக்கு விமர்சனங்கள் இதுல கிடையாது இருந்த பத்திரிக்கை ஊடகங்கள்

அனைத்தும் இந்த படத்தை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.

அப்படி ஒரு சிறந்த படமாக தான் இயக்குனர் மணிரத்தினம் நமக்கு கொடுத்திருந்தார்

அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முதல் கேங்ஸ்டர் படம் என்றும் சொல்லலாம்.

தமிழ் திரையுலக வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த

படங்களில்இதுஒன்று மணிரத்னத்தின் “நாயகன்”.படத்தில்
ஒரு மனிதன்

எப்படிப்பட்ட சூழ்நிலைகளால் குற்றவாளியாக மாறுகிறான், என்பதை அதே

சமயத்தில் மக்களின் இதயத்தில்‌ எப்படி
தெய்வமாக‌ வாழ்
கிறான்

என்பதை மிக பெரிய நுணுக்கமாக சொல்லியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
“நாயகன்” ஒரு சாதாரண கதை இல்லை , அது மனித உணர்வுகளின் ஆழமான பயணிக்கக் கூடிய. ஒரு சிறுவன் போலீசாரால்

தந்தையை இழந்து, பழி வாங்கும் பாதையில் நடக்கும், மும்பையின் குடிசைப்

பகுதியில் வாழும் மக்களின் நாயகனாக உயர்ந்து இதுவே கதையின் மையம்.

அரசுக்கு எதிராகப் போராடும் தொழிற்சங்க தலைவரின் மகன்

சக்திவேல் என்ற “வேலு”, போலீசால் கைது செய்யப்படுகிறார்.

தந்தையை ஏமாற்றி கொன்ற போலீஸாரை பழி வாங்கி, மும்பைக்கு தப்பிச் செல்கிறார்.

அங்கு நல்ல மனம் கொண்ட கடத்தல் வியாபாரியான

ஹுசைன். பாய் அவரை தத்தெடுத்து வளர்க்கிறார்.
வளர்ந்தபின்

ஹுசைனின் வழியில் கடத்தல் தொழிலில் ஈடுபடும்

வேலு, நீதியற்ற சமூகத்தின் நடுவே சாதாரண மக்களின் நம்பிக்கையாக மாறுகிறார். ஆனால்

அதிகாரமும் ஆட்சியும் சேரும் இடத்தில் துயரம் பின்னணியாகி

விடுகிறது. மனைவி நீலா சரண்யா உயிரிழந்ததும்,

மகனின், மரணமும், மகளின், பிரிவும் — அவன்

வாழ்க்கையின் துயரமான அத்தியாயங்களாக மாறுகின்றன.

இறுதியில், தன் பாவங்களுக்கும் தவங்களுக்கும் நடுவே வாழ்ந்த

வேலு, மக்களின் நாயகனாக நீதிமன்றத்தில் வெளிவரும்

தருணத்தில் பழைய வலி திரும்பி வருகிறது.

கெல்கரின் மகன் அஜித், தந்தையின் பழிக்காக சுடும் குண்டு அவனை வீழ்த்துகிறது.

மணி ரத்னத்தின் கையெழுத்து எங்கும் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும்

நுணுக்கம், உணர்ச்சி, வலிமை — மூன்றும் கலந்த கலைநயம். கதையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

சமநிலையில் சொல்லப்படும் விதம் திரையில் கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு உணர்வூட்டுகிறது.

கமல் ஹாசன் தனது வாழ்க்கையின் சிறந்த நடிப்பை

இந்தப் படத்தில் கொடுத்துள்ளார்.

சிறுவனாக, புரட்சியாளராக, தந்தையாக, நாயகனாக —

ஒவ்வொரு வயதிலும் பரிமாணத்திலும் அவர் கதாபாத்திரமாகவே மாறி நிற்கிறார்.

சரண்யா, நிழல்கல் ரவி, கார்த்திகா, நாசர், ஜனகராஜ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரின் நடிப்பும் மிகச்சிறந்தது.

குறிப்பாக சரண்யா நடித்த நீலா கதாபாத்திரம்

இன்னும் மனதில் நிற்கும். அளவில் இருக்கிறது

இளையராஜாவின் இசை இந்தப் படத்தின் உயிர்.

“நிலா அது வானதுமிலே” போன்ற பாடல்கள் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, தராவி குடிசைப் பகுதிகளின்

உண்மையான தோற்றத்தையும் மனித

வேதனையையும் வெளிப்படுத்துகிறது.
தொட்டா தரணியின்

கலை இயக்கம், பி. லெனின் – வி.டி. விஜயன் இருவரின் எடிட்டிங் — அனைத்தும் ஒரே

தரத்தில் இணைந்துள்ளன.
“நாயகன்” ஒரு திரைப்படம் மட்டுமல்ல, அது தமிழ்

சினிமாவின் பெருமை.
மனிதனின் நிழல், நன்மை – தீமை, அன்பு – பழி,

அனைத்தையும் ஒரே கதை வடிவில் சித்தரிக்கும் அரிய படைப்பாக தந்து ள்ளார் இயக்குனர் மணிரத்னம்.மீண்டும் பார்க்க ‍தூண்டும் படம் .இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம்…
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *