
நலம் தரும் நவராத்திரி “
நவராத்திரி வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது பத்தாம் நாளில் நல்லவர்களின் வெற்றியின் விளைவாக தீமைக்குஎதிரான நல்லவர்களின் ஒன்பது இரவுகளின் அடையாளக் கொண்டாட்டமாகும். இந்த காலகட்டத்தில், துர்க்கை சக்தி, ஆற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

‘நலம் தரும் நவராத்திரி’ தினங்களான10 நாட்களும் தேவியர்களின் புராண கதைகளை நடன வடிவில் கல்பவிருக்ஷா நாட்டிய குழுவினர் வழங்குகின்றனர்.
நட்சத்திரங்களின் வீட்டு கொலு, புதுயுகம் நேயர்களின் வீட்டு கொலு, பிரசித்தி பெற்ற கோவில்களில் வைக்கப்படும் கொலு, பள்ளியில் வைக்கப்படும் கொலுக்களின் தொகுப்புகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது
இந்த நலம் தரும் நவராத்திரி நிகழ்ச்சி 03-10-2024 முதல்13-10-2024 வரை காலை 11.30 மணிக்கும் மறு ஒளிபரப்பு மாலை 05.30 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.