தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் கதையம்சம் உள்ள படம் “உதிர்”!
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக, ஞான ஆரோக்கிய ராஜா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் “உதிர்”

சமீபத்தில் வெளிவந்து, ஓடிக் கொண்டிருக்கும் ‘இது கதையல்ல நிஜம்’ படத்தில் நடித்த சந்தோஷ் சரவணன் மற்றும் விதுஷ் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சரத்குமாரின் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷா கதாநாயகி நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, சிங்கம்புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, ஓ.எஸ்.மணி, சிஸ்ஸர் மனோகர், போண்டா மணி ஆகியோர் காமெடியில் கலக்கி உள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக ஜி.வி.சன்மதி நடித்துள்ளார்.

படிக்கும் போது வரும் காதல் சரியா, தவறா என்பதை மையமாகக் கொண்டு, படம் உருவாக்கப் பட்டுள்ளது. சிலையை பார்க்கும் கண்களுக்கு கடவுளாகவும், கற்சிலையாகவும் மாறுபட்டு தெரிகிறதோ, அதேபோல் காதலும் சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு என்று மாறுபட்டு தெரியும் என்கிறார் இயக்குனர் ஞான ஆரோக்கிய ராஜா.


பாடல்களைப் பொறுத்தவரை இளையராஜாவையும், தேவாவையும் ஞாபகம் விதமாக அமைந்துள்ளது. படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது வெல்லக்கட்டி என்ற பாடலை சத்திய பிரகாஷ், சிறகு தொலைத்த பறவை என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமி, கருவில் பிறந்த காதலை பவித்ரா, குடிடா குடிடா பாடலை திப்பு ஆகியோர் பாடியுள்ளார்கள். ‘நமச்சிவாயா… நமச்சிவாயா… ஓம் நமச்சிவாய!’ பாடல் புகழ் அரவிந்த் ஸ்ரீராம் பாடல் இசை அமைத்துள்ளார். மதுரை ஈஸ்வர் பின்னணி இசையமைத்துள்ளனர்.
ஒளிப்பதிவு ஜோ, எடிட்டிங் சார்ப் ஆனந்த், இணை இயக்குனர் ஓ.எஸ்.மணி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், பாடல்களை சாய் மீடியா வெளியிட்டுள்ளது. இந்திய திரைப்பட தணிக்கை குழு, இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்பட விமர்சகர்கள் இந்த படம் கண்டிப்பாக தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறியுள்ளனர்!
“உதிர்” படத்தின் முதல் பார்வையை டி.ராஜேந்தர் வெளியிட்டார். படம் விரைவில் வெளிவர உள்ளது!
@GovindarajPro