
இசைஞானி இளையராஜா பாராட்டி இசையமைத்த ‘நாதமுனி’ படம்.
இயக்குனர் மாதவன் நெகிழ்ச்சி
369சினிமா தயாரிப்பில்
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் இயக்குனர் மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாதமுனி’



சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினைபுரிகிறது என்பதை கருத்தாளமிக்க கதையாக உருவாகியிருக்கும் படம் தான் ‘நாதமுனி’
என்கிறார் இயக்குனர் மாதவன் லக்ஷ்மன்.
சாமானிய தகப்பனாக இந்திரஜித் இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
ஏழைத்தாயாக இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா வாழ்ந்திருக்கிறார்.
பாடகர் அந்தோணிதாசன் மற்றும் ஜான் விஜய், Aவெங்கடேஷ், மற்றும் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் இயக்குனர் மாதவன் கதைசொன்ன உடனே பிடித்துவிட்டதாம் இளையராஜாவுக்கு. படத்தின் கருவும் , அதன் நோக்கமும் அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்திற்கு முத்தான பாடல்களை உருவாக்கிக்கொடுத்துள்ளார் இசைஞானி.
படத்தின் பாடல்களை இளையராஜா, மற்றும் கங்கைஅமரன் இருவரும் எழுதியிருக்கிறார்கள்.
‘நாதமுனி ‘ மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தும் என்றும் பாராட்டியுள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்திற்கு ஒளிப்பதிவு – A குமரன்.
படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்,
பாடல்கள் – இளையராஜா, கங்கை அமரன்.
கலை – KA ராகவா குமார்,
சண்டைப்பயிற்சி – டேஞ்சர் மணி,
நடனம் – சங்கர்,