வெப்சீரிஸ் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நபா நடேஷ்

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் , ஆகியோர் வரிசையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம்வரும் நபா நடேஷ் முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறார்.. ஆம்.. அவர்களை போலவே தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ்.. ,

கன்னடத்தில் கடந்த 2015ல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். புகழ்பெற்ற் நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்கு படவுலகில்
சிறந்த பெர்பார்மர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். . கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டுமே 275 கோடி. மேலும் இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இளம் முன்னணி நடிகர் நிதினுடன் நபா நடேஷ் இணைந்து நடித்துள்ள மேஸ்ட்ரோ திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


இந்தநிலையில் தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ். ஆனால் திரைப்படத்தில் அல்ல.. திரைப்படங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்று வரும் வெப்சீரிஸில்.. ஆம்.. பாலிவுட் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க ஆடிஷனில் சிறப்பாக நடித்து தேர்வாக இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் முதல் வெப்சீரிஸும் இதுதான். இந்தியிலும் தனது சாதனை தடத்தை நபா நடேஷ் பதிப்பார் என நம்புவோம்.