
நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் “வானரன்”



பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம்தான் வானரன் என்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.
பரபரப்பாக பேசப்பட்ட
” டூ “எனும் படத்தை இயக்கியவரான ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் .ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன்
சுஜாதா ராஜேஷ்
தயாரித்திருக்கிறார்கள்
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில்
நடித்த நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர்,
ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு-
நிரன் சந்தர்
இசை- ஷாஜகான்
பாடல்கள்- செந்தமிழ்
படத்தொகுப்பு-
வித்து ஜீவா
மக்கள் தொடர்பு – வெங்கட்
தயாரிப்பு –
ராஜேஷ் பத்மநாபன்
சுஜாதா ராஜேஷ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
ஸ்ரீராம் பத்மநாபன்
கதாநாயகன் பிஜேஷ் நாகேஷ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். தமிழ் சினிமா இவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
அதுபோல் கதாநாயகி அக்ஷயா ஒயிலாட்டக் கலைஞராக மிக இயல்பாக நடித்துள்ளார்.
குணச்சித்திர வேடத்தில் ஆதேஷ் பாலாவும், குழந்தை நட்சத்திரமாக பேபி வர்ஷாவும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.
இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன்
படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களிலும் 30 நாட்களில் திட்டமிட்டப்படி ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.இதன் நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.