
” என் காதலே திரைப்பட விமர்சனம்…
ஸ்கை வாண்டர்
நிறுவனத்தின்
சார்பில்,
ஜெயலட்சுமி தயாரித்து கதை எழுதி, இயக்கியுள்ளார்.
நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா, நடிப்பில், உருவாக்கி
அருமையான காதல் கதையாக,
“என் காதலே” என்ற திரைப்படம் மே 9- ஆம்-தேதி வெளியாகவுள்ளது.
திரைப்படத்துறை
யில் அதிக அனுபவமும் காதலிலும், ஆர்வமும்
கொண்டவர் ஜெயலட்சுமி. தனது முதல் படமாக இந்த
திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இது அவரது முதல் திரைப்படமாக இருந்தாலும்.சினிமாத்துறைக்கு இவர்
முற்றிலும் பழமை
யானவர். மீனவ மக்கள் வாழ்க்கையின் பின்னணியில் ஒரு
மென்மையான, முக்கோண காதல் கதையாக இந்தப் படத்தை உருவாகியுள்ளார்.
லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார்.
நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு
அவரது மாமன்மகளுக்கும் திருமணம் .
நிச்சயிக்கப்பட்டிருந்து.அந்த தடைகளை மீறி அவர்கள் காதல் நிறைவேறியதா?,
இல்லை காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதை தான் இந்தப்படத்தின் கதைக்களம்.
கபாலி, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் நடித்த லிங்கேஷ், இந்தப் படத்தில் நாயகனாக
நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார்.
இது தமிழில் இவருக்கு முதல் திரைப்படம்…
இருந்தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளிப்படுத்திநடித்துள்ளார்.
லியா….நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.
அறிமுக நடிகர் காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார்.
இவருக்கும் இது தான் முதல்திரைப்படம் இருந்தாலும் திரையில் நிஜவில்லனாக மிரட்டியுள்ளார்..
திரைத்துறையில் இவருக்கு அதிக நடிக்க வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது..
இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில்… இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர். வெளியாகி
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…
தமிழகம் முழுவதும் மே 9 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு விபரம்:
தயாரிப்பு – ஸ்கை வாண்டர் என்டர் டென்மெண்ட் .
தயாரிப்பாளர் – ஜெயலட்சுமி
நிர்வாக தயாரிப்பாளர் – காட்பாடி ராஜன்
எழுத்து, இயக்கம் – ஜெயலட்சுமி
ஒளிப்பதிவு – மூடர்கூடம் புகழ் டோனி ஜான்
இசை – சாண்டி சாண்டெல்லோ
எடிட்டிங் – தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா.
பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி
பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஶ்ரீதர்
சேனா, திலீப் வர்மன் மலேசியா , அனிதா ஷேக்.
மக்கள் தொடர்பு – வேலு