
“மை லார்ட்” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், ஆஷா
சரத், குரு சோமசுந்தரம், ஜெய பிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர்: ராஜு முருகன்.
மியூசிக் : –
ஷான் ரோல்டன்.
ஒளிப்பதிவு:-
நீரவ்ஷா.
படத்தொகுப்பு:-
சத்யராஜ் நடராஜன்
தயாரிப்பாளர்கள்:- ஒலிம்பியா மூவிஸ் – ஜெயந்தி அம்பேத்குமார்…
ஏழையவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனையுடன் வாழும் சசிகுமாரும்,
அவரது மனைவி தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்க அரசு
இயந்திரத்தை நாடி வருகிறார்கள். அது
வழக்கம் போல் எளியவர்களை வாட்டி வதைக்கின்றன. பணம், அதிகாரம் ஆகியவைகள்
முன்னாள் சாமானியார்கள் உயிருடன் இருக்கும் நான்
பிணமாக பார்க்கும் கேவலமான நிலையை மாற்றி ஒரு வாய்ப்பு சசிகுமாருக்கு கிடைக்கின்றது.
மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து உயிருக்கு போராடிய நிலை ஏற்படுகின்றன. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் அவர், வெளி உலகத்திற்கு தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, அறுவை சிகிச்சையை
ரகசியமாக செய்து முடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், அவரது இரத்தப் பிரிவு அரிதான என்பதால், அவருக்கான மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகின்றன.
இந்திய அளவில், அவருக்கான மாற்று சிறுநீரகத்தை தேடிய, இருவர் அதற்கு பொறுத்தமானவர் இருக்கிறார்கள்.
அதுல ஒருவர் கோவில்பட்டியை சேர்ந்தவர்.
சசிகுமாரை தேர்வு செய்யும் அமைச்சர் தரப்பு, அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சிக்கின்றன. அவர்களது வழியில் சென்று தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரசு
இயந்திரத்திற்கு அதிகார வர்க்கத்திற்கு சாமானியனான சசிகுமார் எழுதும் தீர்ப்பு தான் “மை லார்ட்” கதைக்களம்.
அப்பாவியான முகம், சோகம் நிறைந்த வாழ்க்கை,
வெள்ளந்தி சிரிப்பு என்று சசிகுமாருக்கு பொறுத்தமான கதாபாத்திரம் என்பதால், அவர் திரையில் தோன்றிய பார்வையாளர்கள் மனம் கனத்து விடுகின்றன. அதிகார வர்க்கத்தினால் பாதிக்கப்படும்
சாமானியர்களை தனது உடல் மொழிகளால் பிரதிபலித்திருக்
கிறார். சசிகுமாரின் நடிப்புக்கு சபாஷ்.
சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கிறார் சைத்ரா ஜே.ஆச்சார், இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்ப்பதுடன், தந்தை ஆவியின் மூலம் அதிரடியான
நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், அதிகார திமிரை தனது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி மிரட்டுகிறார். படுக்கையில் இருந்தாலும், தனது கதாபாத்திரத்தின் பலம் அறிந்து நடித்திருக்கிறார் அவரது நடிப்புத் திறன் வியக்க வைக்கிறது.
பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், அடிபட்டு, மிதிபட்டாலும் எதற்கும் விலை போகாமல் நியாயம் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு தனது சிறப்பான நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், வட்டி தொழில் செய்யும் வசுமித்ரா என பரிட்சயமான முகங்களும், நடித்த பரிட்சயம் இல்லாத சில முகங்கள் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பார்வையாளர்கள் மனதில் தங்கி விடும் அளவுக்கு இயல்பாக பயணித்திருக்கிறார்கள்.
பிரமாண்டம், வண்ணமயமான காட்சிகளை மட்டுமே படமாக்கி வந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எளிய மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாக காட்சிப்படுத்தி, இயக்குநர் ராஜு முருகனின் கதை சொல்லலுக்கு பலம் சேர்த்திருக்கிறார். எந்த இடத்திலும் தனக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தாமல், இயக்குநரின் பார்வைக்கு ஏற்ப தனது கேமராவை பயணிக்க வைத்திருக்கிறார்
நீரவ் ஷாவின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எளியோரின் வலியை சொல்லும் விதமாக பயணித்திருக்கிறார். பின்னணி இசையும் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் ஒன்றாக பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்
கிறார்.
படத்தின் நடு நடுவே சில தொய்வுகள் தெரியும் வகையில் படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன், காட்சிகளை தொகுத்தாலும், இடைவேளை மற்றும் அதற்கு பிறகான படத்தை வழக்கமான சினிமா சுவாரஸ்யத்துடன் நகர்த்தி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ராஜுமுருகன், எளியவர்களின் வாழ்வின் மூலம் அதிகார வர்க்கத்தினருக்கும், அரசு இயந்திரத்தின் முரண்பாடுகளுக்கும் சம்மட்டியடி கொடுத்திருக்கிறார். தனது வசனத்தின் மூலம் சமூக அவலங்களை தோலுறித்திருப்பதோடு, அதை சரி செய்யும் அரசு இயந்திரத்தின் கோளாறுகளை நகைச்சுவையாக சுட்டிக்காட்டி சிரிக்க வைக்கிறார்.
சசிகுமாருக்கு எதிராக நடக்கும் சதி திட்டங்களால், சாதாரண மனிதர்களுக்கு நிகழப்போகும் முடிவு தான் ஏற்பட போகிறது, என்ற பதற்றத்தோடு படம் நகர்ந்தாலும், எதிர்பார்க்காத திருப்பத்துடன்
அமைக் கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ், எளியவர்களின் குரலை வலிமையாக ஒலிக்கச் செய்யும் இயக்குநர் ராஜு முருகனின் தொடர் முயற்சிக்கான பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
படம் பார்த்தத்தில், “மை லார்ட்” தீர்ப்பு வழங்கியது மனிதனின் அறிவின் அறியாமையால் அதுவும் படிப்பறிவு இல்லாத ஏழைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே கெடுமையையும் அடையாளமாக கொண்ட விளக்கம். அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…