“மை டியர் டால்” திரைப்பட விமர்சனம்…

Share the post

“மை டியர் டால்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : – விஜே பப்பு, அனுபமா, கேபிஒய்

ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர்:- ஏ.அரவிந்த் ராஜ்

மியூசிக் : –
எம்.ஃபாசில்

ஒளிப்பதிவு:-
பாலாஜி.கே.சேகர்

படத்தொகுப்பு :-
எம்.பாசில்.

தயாரிப்பாளர்கள்:- ஆர்.எம்.ஜெயராமச்
சந்திரன்

கதாநாயகன் விஜே பப்பு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் கதாநாயகி

அனுபமாவை ஒருதலையாக காதலிக்கிறார்.

ஆனால், அனுபமா அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு நபரை காதலிக்கிறார். இந்த விஷயம் தெரிந்த உடன் அந்த

பணியை விட்டு விட்டு, வேறு ஒரு நிறுவனத்தில் விஜே பப்பு பணிக்கு

சேருகிறார். சில வருடங்களுக்குப் பிறகு

திருமணத்திற்காக பெண் பார்க்கும் பப்புவுக்கு, அவர் காதலித்த

அனுபமாவின் புகைப்படத்தை காட்டுகிறார்கள். மகிழ்ச்சியில் திக்கு

முக்காடி, ஓகே சொல்பவர், ”மனதில் நின்ற காதலி மனைவியாக வந்தால் வாழ்க்கை

இன்ப வரமாகும்”, என்ற எண்ணத்தில் பெண் பார்க்க செல்கிறார்.

ஆனால், அந்த பெண் பார்க்கும் போது நிகழ்வுக்குப் பிறகு விஜே பப்புவின்

வாழ்க்கையில் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழ்கிறது. அந்த

மாற்றங்களும், அனுபமா மீதான அவரது காதலும் அவரது

வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றன.

அவை என்ன ?, அதில் இருந்து விஜே பப்பு மீண்டாரா ?, இல்லையா?

அவருக்கு அனுபமாவின் காதல் கிடைத்ததா?

செய்தார்களா என்பதை படத்தின் மீதிக்கதைக்களம்.

விஜே பப்பு, காதல் கதாநாயகனாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

அவ்வபோது தனது வழக்கமான நகைச்சுவை உணர்வை

வெளிப்படுத்தி பார்வையாளர்களை சிரிக்க வைக்க

முயற்சித்திருப்பது, அது காதல் வலியை வெளிக்காட்ட

கண்ணீர் விட்டு கதறி நடித்திருக்கிறார், சில இடங்களில் பொம்மையை

காதலியாக நினைத்து வாழ்வது, என்று தனது மொத்த

வித்தையை வெளிக்காட்டி, தன்னை ஒரு நடிகர்

என்பதை நிரூபிக்க கடுமையாக உழைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகை அனுபமா, ஒப்பனை இல்லாத இயல்பான

அழகியாக கவனம் ஈர்ப்பதுடன் கொடுத்த

வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

கதாநாயகனின் நண்பராக நடித்திருக்கிறார் கேபிஒய் ராஜவேலு,

அவரது மனைவியாக நடித்திருக்கிறார் சுதா, நாயகியின் தோழியாக நடித்திருக்கிறார் தாரா, நாயகனின் அலுவலக தோழியாக நடித்திருக்கிறார் கீர்த்தனா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார் ஆஷா, அப்பாவாக நடித்திருக்கிறார் ராஜாமணி, பேபி தீக்‌ஷிதா, நாயகியின் முன்னாள் காதலராக நடித்திருக்கிறார் டொமினிக் ஆகியோர் புதுமுகங்களாக இருப்பினும்,

கதாபாத்திரங்
களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து

திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.சேகர், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்

பயணிக்கும் திரைக்கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாகி படத்தின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவியிருக்கிறார்.

எம்.பாசிலின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்

திரைக்கதையில் இருக்கும் காதல் உணர்வுகளுக்கு

உயிரூட்டும் விதத்தில் பயணித்திருக்
கின்றன.

எளிமையான திரைக்கதை என்றாலும், தனது

படத்தொகுப்பு மூலம் படத்தை சுவாரஸ்யமாக

நகர்த்திச் சென்றிருக்கிறார் எம்.பாசில்.

உயிரற்ற பொம்மையை பின்னணியாக வைத்துக்கொண்டு,

உயிரில் கலந்த காதலியின் பிரிவையும், அது

தரும் வலியையும் பார்வையாளர்களின் இதயங்களில் கடத்த

முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ், அதற்கான

திரைக்கதையை எளிமையாக கையாண்டிருப்
பதால் அதை சுவாரஸ்யமாக

சொல்ல அதிகம் மெனக்கெட்டிருக்
கிறார்.

கதை சொல்லல், மேக்கிங் ஆகியவற்றில் சிறு சிறு குறைகள்

இருப்பினும், அவை அனைத்தும் பொருளாதார

ரீதியானது மட்டும் என்பது திரையில் தெரிகிறது. அதை தவிர்த்துவிட்டு

பார்த்தால், இது நிச்சயம் கவனம் ஈர்க்கும் காதல் படம்.

தனக்கான ஒரு எல்லை வகுகக்கப்பட்டி
ருப்பது, அதற்குள் பயணிக்கும் ஒரு

காதல் கதைக்கான திரைக்கதையை சாமர்த்தியமாக

எழுதியிருக்கிறார் இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ், புதுமுக நடிகர், நடிகைகளை வைத்துக் கொண்டு,

காதல் உணர்வுகளை பார்வையாளர்கள்

மனதில் கடத்துபோவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

படம், பார்த்தத்தில் “மை டியர் டால்’ காதல் வலி. இருக்க‌‌ தான் செய்யும்.‌தண்ணி‌

ஊத்தி மரம் வளர்ப்பதில்லை‌ அன்பை கொடுத்து

வளர்க்கும் காதல் தினத்தில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *