இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து, பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலை, MLC K கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi க்காக உருவாக்கியுள்ளனர் !





முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரான, மக்களிடம் முன்னுதாரன தலைவியாக மிளிர்ந்து வரும் கல்வகுந்தலா கவிதா Telangana Jagruthi யை வழிநடத்தி, வரலாறு படைப்பதுடன், தற்போது பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலை இணைந்து உருவாக்கியுள்ளார்



ஹைதராபாத் – பதுக்கம்மா பண்டிகையை முன்னிட்டு, கல்வக்குந்தலா கவிதா தனது இல்லத்தில், முன்னணி திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து Telangana Jagruthi தயாரித்துள்ள பதுக்கம்மா பாடலை நேற்று மாலை 5:15 மணிக்கு வெளியிட்டார். தெலுங்கானாவின் மாவட்டங்களில் படமாக்கப்பட்ட இப்பாடல் நேற்று பாத்துக்கம்மா விழாவின் முதல் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. காலாச்சார பெருமை மிகு பதுக்கம்மா பாடலுக்கு, ஆஸ்கர் விருது நாயகன், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார், மிட்டப்பள்ளி சுரேந்தர் எழுதியுள்ளார், மேலும் தேசிய விருது வென்ற பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.

பதுக்கம்மா தெலுங்கானாவின் உட்புற பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், இது உலகம் முழுவதிலுமுள்ள இம்மாநில மக்களின் கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரான, கல்வகுந்தலா கவிதா வழிநடத்தும் Telangana Jagruthiஅமைப்பு தெலுங்கானாவின் கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் தெலுங்கானா பெருமைகளை வலுப்படுத்துவதிலும், அதன் வேர்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. Telangana Jagruthiஅமைப்பு இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும், தெலுங்கானாவின் கலாச்சார மற்றும் இலக்கிய நிலப்பரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரும் சக்தியாக இருந்து வருகிறது.


இசைப்புயல் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்,கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi அமைப்பு, ஆகியோரின் ஒருங்கிணைப்பில் உருவாகியுள்ள பதுக்கம்மா சிறப்பு பாடல், தெலுங்கானாவின் பண்டிகை சூழலுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக தெலுங்கானாவின் பெண்களுக்கு வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான பதுக்கம்மா விழாவை அனுபவிக்க இது மற்றொரு உந்துசக்தியாக உள்ளது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்பாடலை வெளியிட்டு ..
வாழ்வின் திருவிழா.
ஒற்றுமையின் கொண்டாட்டம்.
பதுக்கம்மாவின் அழகின் சிறு துளியை உங்களுக்குக் #AllipoolaVennela” வழியே Telangana Jagruthi உடன் இணைந்து கொண்டு வருகிறது, எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள MLC கவிதா அவர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில்
வண்ணங்கள், மெல்லிசை மற்றும் ஒற்றுமையின் பண்டிகை, பதுக்கம்மா சிறப்பு பாடலின் ஒரு காட்சியை இங்கே பகிர்கிறேன். இதனை உருவாக்கியவர்கள் @arrahman @menongautham என் சகோதரிகள் இணைந்த கனவு குழு . #AllipoolaVennela #BathukammaSong @TJagruthi @BrindhaGopal1 என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடலை MLC கவிதா மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள MLC கவிதாவின் இல்லத்தில் வெளியிட்டனர்.
அக்டோபர் 6 ஆம் தேதியான இன்று முதல், தெலுங்கானா மற்றும் உலகம் முழுவதும் 9 நாள் திருவிழா கொண்டாட்டம் துவங்கியுள்ளது.