
முஃபாசா: தி லயன் கிங் திரை விமர்சனம்!
முஃபாசா தாய் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் முஃபாசா காடு வறண்டு அனைத்து விலங்குகளும் நீரின்றி அவதிப்பட்டு வரும் போது எதிர்பாராத விதமாக மழை பெய்கிறது மழை கண்ட முஃபாசா துள்ளி குதித்து விளையாடுகிறது எதிர்பாராத விதமாக பெரு வெள்ளப் பெருக்கல் சிக்கிக் கொண்டு தனது பெற்றோரையும் தன் தாய் மண்ணையும் பிரிய நேர்கிறது.
நீரில் தத்தளிப்பவனுக்கு ஆபத்பாந்தவனாய் உதவுகிறான் இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி.
இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா. அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்கு குறி வைக்கிறான் கீரோஸ். கீரோஸின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை மீண்டும் கண்டடைந்தானா முஃபாசா என்பதே Mufasa : The Lion King படத்தின் மீதிக்கதை.