‘திரு.மாணிக்கம்’ திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் :- பி.சமுத்திரக்கனி,
அனன்யா பாரதிராஜா, தம்பி ராமையா,இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேஸி, கருணாகரன், சுனில் குமார், சந்துரு, சாம்ஸ், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் : – நந்தா பெரியசாமி.
மியூசிக் :-,ஜி.பி.ரேகா ரவிகுமார், சீனிந்தா கோபாலகிருஷ்ணா ரெட்டி , ராஜாசெந்தில்,
பின்னணி இசை பாடல்.விஷால் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு.
எம். சுகுமார்
படத்தொகுப்பு. குணா
தயாரிப்பாளர்கள் :- ஜிபிஆர்கே சினிமாஸ்.
கேரள மாநிலத்தில், குமுளியில் என்ற இடத்தில் சின்னதாக
லாட்டரி டிக்கெட் பெட்டி கடை நடத்துபவர் சமுத்திரக்கனி,
மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளுடன் எளிமையாக பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வரும், எல்லாவிடம்.எளிமையா
அன்பாக பழக் கூடியவர். இந்த சமயத்தில், அவரிடம் சில பேர் லாட்டரி
டிக்கெட்டுகள் வாங்குபவர்களில் பாரதிராஜா, ஒருவர்
ஆவார். தினமும் லாட்டரி டிக்கெட் வாங்குபவர் அப்போது,
அவரிடமிருந்த பணம் இல்லை பணம் தொலைந்து விட்டதால், ஒரு டிக்கெட்டு வாங்க அவரிடம் பணம் இல்லை அதனால்
அந்த டிக்கெட்டுகளை பார்த்த பிறகு அதை பணம் கொடுத்துவிட்டு திரும்ப பெற்றுக்கொள்கிறேன், என்கிறார்.
என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
அவர் வாங்கிய டிக்கெட்டுகளில் ஒன்றில் ரூ.1.50 கோடி
பரிசு பணம் அடித்து விட்டது. அதை அவரிடம்
ஒப்படைக்க சமுத்திரக்கனி முடிவு செய்து விடுகிறார்.
பாரதிராஜா என்பவர் யார்?, அவர் எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல் அவரிடம்
கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்த
ஊர் பேரை வைத்துக்கொண்டு, அவரை கண்டுபிடித்து
பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன?
சமுத்திரக்கனி எப்படி பயணிக்கிறார். விஷயம் தெரிந்த
அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார், அவரது முடிவுக்கு
எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை தடுத்து நிறுத்த
முயற்சிக்கிறார்கள்.
அவர்களது முயற்சியால் சமுத்திரக்கனியை சில ஆபத்துகளும் துரத்த,
அதை உரியவரிடம் லாட்டரி டிக்கெட்டை ஒப்படைத்தாரா?, இல்லை
அவரது நேர்மை குணம் சரியானதா?, அதனால் அவருக்கு நேர்ந்தது
என்ன? ஆகிய கேள்விகளுக்கு
பதிலை மனித நேயதோடு சொல்வது தான். திரு.மாணிக்கம்’.திரைப்படத்தின் கதைக்களம்
எளிமை, அனைவரிடத்திலும்
அன்பு செலுத்தும் குணம், தெளிவான சிந்தனை, நேர்மையான
வாழ்க்கை என்று சமுத்திரக்கனிக்காகவே கதை ஆக்கப்பட்ட சட்டைப் போல் இருக்கும்
மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில், மனுஷன்
மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அவர் அதிகம் பேசவில்லை என்றாலும், மாணிக்கம்
கதாபாத்திரத்தின் நேர்மையும், அதன்
பின்னணியும். உள்ள பல விஷயங்களை பேசாமல் பேசிச் செல்கிறார்.சமுத்திக்
கனி
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்துள்ளார். அனன்யா கல்லூரி,
காதல் என்று இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவராக இருந்தாலும், மனைவி,
இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று முதிர்ச்சியான
கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்ப கஷ்ட்டம்
தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், கணவரின் நேர்மையால் அது
முடியாமல் போகும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது
நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி நல்ல நடிகையாக நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.
முதியவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும்
பாரதிராஜா, வழக்கம் போல் எதார்த்தமாக நடிப்பு
நடித்திருக்கும் இளவரசு, சிறிய காட்சியில் வந்தாலும் நினைவில் நிற்கிறது
கதையை தங்கி பிடிக்கும் நாசர், வடிவுக்கரசி, ஆகியோர்.
தேவாலய
பாதிரியராக நடித்து பாதிரியார்களை
கலாய்த்த சின்னி ஜெயந்த், காவலராக நடித்துள்ள
கருணாகரன், பேருந்து ஓட்டுநர்களாக நடித்திருக்கும் சாம்ஸ், ஸ்ரீமன் என பலர் படத்தில்
நடித்துள்ளனர் அனைவரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை
என்றாலும் தங்களது அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பங்கம் விளைவிக்கவில்லை.
ஆனால், லண்டன் ரிட்டர்னாக நடித்திருக்கும் தம்பி
ராமையா, காமெடி என்ற பெயரிலும், நடிப்பு என்ற பெயரிலும் வெளிக்காட்டும்
பாவனைகளும், செயல்களும் சிரிக்க முடியாத கோமாளித்தனமாக
மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கு
கோபத்தை வர வைக்கும் விதத்தில் இருக்கிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும்
கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும்
பிரதிபலிக்கிறது. பின்னணி இசையும் அளவு.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா கண்கள் கேரள பகுதிகளை எதார்த்தமாகவும்
அழகாகவும் காட்சியை வெளிப்படுத்தியிருப்பதோடு, எளிமையானவர்களின் சோகம் மற்றும்
கண்ணீரை பார்வையாளர்களிடம்
நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
சமுத்திரக்கனியின் பயணம் வெற்றி பெறுமா? என்ற கேள்வியோடு ரசிகர்களை பதற்றமாகவே
படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் குணா.
எழுதி இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி, எளிமையானவர்களின்
நேர்மையான வாழ்க்கையை, பிரச்சாரமாக
இல்லாமல், விறுவிறுப்பான திரில்லர் ஜானராகவும்,
குடும்பமாக பார்க்க கூடிய நல்ல மெசைஜை சொல்லும் படமாகவும் கொடுத்துள்ளார்.
லாட்டரி டிக்கெட், பரிசு, நேர்மை, அதன் மூலம்
எழும் பிரச்சனைகள் ஆகியவற்றை நாம் ஏற்கனவே சில
படங்களில் பார்த்திருந்தாலும், அதை வேறு வித ஒரு
பாணியில் சொல்ல முயற்சித்திருக்கும் நந்த பெரியசாமி, கதை குடும்ப பின்னணியோடு
பயணித்தாலும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற
எதிர்பார்ப்போடு விறுவிறுப்பாகவும்
கதையை நகர்த்திச் சென்றிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இப்படி ஒரு மனிதர் இருப்பரா? என்று யோசிக்காமல், ஒவ்வொருவரும் இப்படித்தான் இருக்க
வேண்டும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும்
இயக்குநர் நந்தா பெரியசாமி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம், என்று
நினைப்பவர்களுக்கு நேர்மையான வாழ்க்கையின் மூலம் கிடைக்கும் மன
நிம்மதியை படம் பார்ப்பவர்களும்
உணரும்படி திரைக்கதையை
கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
திரு.மாணிக்கம்’
நேர்மை என்றால் என்ன என்பதனை திருத்தும்.மக்களுக்கு எடுத்து காட்டும் உன்னதமான படைப்பை தந்து இருப்பது இயக்குனரை பாராட்ட வேண்டும்…