மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’திரைப்பட விமர்சனம்…

Share the post

மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : – ஹரி பாஸ்கர் , லாஸ்லியா , ரியான் , இளவர்சு,ஷாரா ,மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- அருண் ரவிச்சந்திரன்,

ஒளிப்பதிவு :- குலோத்துங்க வர்மன்.

படத்தொகுப்பு:- ராம சுப்பு.

தயாரிப்பாளர்கள் :- நிதின் மனோகர் , முரளி ராமஸ்வாமி

பொறியியல் கல்லூரி மாணவரான கதநாயகன் ஹரி பாஸ்கர், தனது கல்லூரியில் படிக்கும், கதாநாயகி லாஸ்லியாவை காதலிக்கிறார்.

லாஸ்லியா அவரது காதலை நிராகரித்து விடுகிறார். கல்லூரி

முடிந்து சில வருடங்களுக்குப் பிறகும் படிப்பை

முடிக்காமல் அரியர் வைத்துக்கொண்டு ஊர் சுற்றி வரும் ஹரி

பாஸ்கர், சந்தர்ப்ப சூழ்நிலையால் லாஸ்லியாவின் இல்லத்தில் ஆறு

மாதங்கள் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ய வேண்டிய ‌சூழல் எற்படுகிறது. அப்போது அவருடனான புரிதலால்

நட்பு பாராட்டும் லாஸ்லியா, ஹரி பாஸ்கரை தனது நெருங்கிய நண்பராக
எற்று
அவன்‌மீது அன்பும் அக்கறை காட்டுகிறாள்.

அதை கொண்டு‌ அவன் உண்மை‌‌யாக தன்னை அவள் லவ் பண்றாள் என அவன் நினைக்கிறான்

லாஸ்லியாவின் நட்பை காதல் என்று புரிந்துக் கொள்ளும் ஹரி பாஸ்கர், மனதுக்குள் காதல்

வளர்த்துக்கொள்ள, திடீரென்று லாஸ்லியா வேறு ஒருவரை காதலிப்பது தெரிய

வருகிறது. இதனால், அதிர்ச்சியடையும் ஹரி பாஸ்கர், லாஸ்லியாவுக்கு

தொடர்ந்து காதல் தொல்லைக் கொடுக்க, கடைசியில் யாருடைய

காதல் வெற்றி பெற்றதா ? என்பதே கதை.க்களம்

கதாநாயகனாக நடித்திருக்கும் யூடியுப் பிரபலம் ஹரி பாஸ்கர்,

இதுல முதல் படம் மாதிரி போல் இல்லாமல் நேர்த்தியாக நல்லவே நடித்திருக்கிறார்.

அம்மாவின் அன்பில் மூழ்கி, அப்பாவின் அடியோடு

வளர்ந்தாலும், அதைப் பற்றி கொஞ்சம் கூட

கவலைப்படாமல் பட்டும் பாடாமல் செம

ஜாலியாக சுற்றி வரும் இந்த இளைஞர் வேடத்திற்கு

செம்மையாக கச்சிதமாக நல்லவே பொருந்தி இருக்கிறார்,

தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் இளைஞர்களை கவர

முயற்சித்து‌‌ நடித்திருக்கிறார். ஆனால், அவரது செயலபாடுகள் நாம்

ஏற்கனவே பல படங்களில், பல நடிகர்களிடம்

பார்த்துவிட்டதால்,
எல்லாமே ஒன்றாகவே
தெரிகின்றது

பார்வையாளர்களை செம்மையாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, நடிப்பிலும், அழகிலும் பிரகாசமா ஜொலிக்கிறார்.

மிக அழுத்தமான கதாபாத்திரத்தில்

மிக சாதாரணமாக நடித்து பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரயான்,

கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

சாரா வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறார்.

இளவரசு, கதாநாயகனின் அம்மாவாக நடித்த

நடிகை, தங்கையாக நடித்தவர் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

இசையமைப்பாளர் ஓசோ வெங்கட்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்

திரைக்கதைக்கு பெரும் பலமாக கொண்டு ப் போகிறது.

ஒளிப்பதிவாளர் குலோத்துங்க வர்மன், காட்சிகளை பிரமாதமான அமைச்சிருக்கிறார்

படமாக்கியிருப்பது கதநாயகன் மற்றும் கதாநாயகியை அழகாக காட்டியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ராம சுப்பின் நேர்த்தியான

படத்தொகுப்பு திரைக்கதையை சலிக்காமல் எடுத்துள்ளார்.

எழுதி இயக்கி அருண் ரவிச்சந்திரன், த இப்போதிய

தலைமுறையினர் காதலை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்,

என்பதை ஜாலியாக சொல்ல முயற்சித்து‌ இருக்கிறார். ஆனால், அதற்கான திரைக்கதை

மற்றும் காட்சிகள் 20 வருடங்களுக்கு முன்னால் தமிழ் சினிமா ரசிகர்கள்

பார்த்து
பழகிய பாணி என்பதால், பெரிதாக பாதிக்கவில்லை.

கதாநாயகன் கண்ணோட்டத்தில் இருக்கும் காதலை தவறு, என்று சொல்லும் கதாநாயகி, அதே கட்டத்தில்.

இந்த காதலை பார்க்கும் போது, உண்மையான காதல் என்பது என்ன?

என்பதை புரிந்துக் கொள்ள ஒரு பெண்

பிடிக்கவில்லை என்று ஒருதடவை சொல்லிவிட்டால், அவரை தொடர்ந்து

தொல்லைக் கொடுக்க கூடாது, என்பதை கதாநாயகன் புரிந்துக் கொள்ளும் காட்சியும்

ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற அனைத்தும் நாம் ஏற்கனவே பல படங்களில்
பார்த்த அம்சங்கள் தான்

என்றாலும், படத்தை குழப்பம் இல்லாமல் நகர்த்திச் செல்லுகிறார்,

அதையும் செம காமெடியாக காட்சிப்படுத்துள்ளார். அறிமுக இயக்குநர்

அருண் ரவிச்சந்திரனை பாராட்ட வேண்டும்.

‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ லவ் இஸ் கோல்டு.எனறு

சொல்ல வேண்டும் இதை பார்த்து ரசியுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *