‘காலை மலர்’

உங்கள் ஜெயா டிவியில் ‘காலை மலர்’ இப்போது புத்தம் புதிய பொலிவுடன், புதிய வடிவில், புது அரங்கில் தினமும் காலை 7:30 மணி முதல் 9.00 மணி வரை உங்களை மகிழ்விக்க வருகிறது.


இந்நிகழ்ச்சியை சூர்யா மற்றும் சந்திரலேகா தொகுத்து வழங்கி வருகின்றனர். தினமும் காலை 7.30 மணிக்கு நம்முடைய ராசி பலனை தெரிந்து கொள்வதுடன், நம்ம விருந்தினர் பக்கத்தில் சிறப்பு விருந்தினர் உடன் ஒரு ஜாலி உடன் உதயமாகும் காலை மலரில் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ‘சிரிப்போம் சிந்திப்போம்’ என்ற ஒரு பகுதி மற்றும் நம் கண்ணுக்கு தெரிந்த பல விஷயங்களை பற்றிய தெரியாத தகவல்களை கூறும் ‘தெரிந்ததும் தெரியாததும் ‘என்னும் சுவாரஸ்யமான பகுதியுடன் செப் தீனா மற்றும் சுஜா கைவண்ணத்தில் ‘கம கமக்கும் சமையல்’ சேர்ந்து நம் காலைப் பொழுதை கமகமக்க வைக்கிறது.



மாத்தி யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டு என்பதை உணர்த்தும் பகுதியாக மாத்தி யோசிக்க துண்டும் ‘மாத்தியோசி’ பகுதியுடன் ஒரு கேள்விக்கு பலரிடம் பல கோணத்தில் பல பதில்கள் கிடைக்கும் அப்படி மக்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்களிடம் இருந்து வரும் சோக்கான பதில்களுடன் கூடிய ‘சோக்கா சொன்னீங்க’ போன்ற பல புதிய பகுதிகளுடன் புதிய வடிவில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது காலை மலர் உங்கள் ஜெயா டிவியில் .
