இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்திய2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற4-வது சர்வேதச அளவிலான எண்கணிதப் போட்டிவெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு- கோப்பைகள் வழங்கப்பட்டது

Share the post

இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்திய2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற4-வது சர்வேதச அளவிலான எண்கணிதப் போட்டிவெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு- கோப்பைகள் வழங்கப்பட்டது

சென்னை, ஜீன்.24-அகில இந்திய அளவில் சுமர் 2500-க்கும் மேற்பட்ட மாண- மாணவியர்கள் பங்கேற்கும் 4-வது சர்வேதச அபாகஸ் அடிப்படையிலான எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது. வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் சர்வதேச அளவில் மனக்கணிதப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு 4-வது சர்வதே எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை வரும் 24-தேதி (சனிக்கிழமை) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது. .இந்த ஆண்டு நடந்த சர்வதேச அபாகஸ் அடிப்படையிலான எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து சுமார் 2500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த சர்வதேச போட்டியினை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் இந்தியன் அபாகஸ் அமைப்பு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தது. போட்டியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவியர்களுக்கு சரியான வழிமுறைகளுடன் சிறப்பான தேர்வு எழுதி வெற்றி பெற சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், இந்த போட்டியினை சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பல பணிகளை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாது, சென்னை அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் அபாகஸ் நிறுவனம் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கணித பாடப்பிரிவில் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகளை அளித்து வருகிறது.அதன் விளைவாக இந்த சர்வதேச போட்டியில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களும் மற்றும் தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றார்கள். அது இந்த ஆண்டு நடத்தப்படும் அபாகஸ் அடிப்படையிலான எண்கணித / மனக்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் மேலும் ஒரு சிறப்பாகும். போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கம், பரிசு பொருள்கள் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்க வழங்கப்பட்டது. இதுபோன்று சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் அவர்கள் உயர்ந்த பதவிகளில் சாதனை படைக்க இந்த போட்டி மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.இந்த சர்வதேச போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில், எங்கள் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் அதுதான் எங்களது முதல் நோக்கம். அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள் எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம். அதன் ஒரு வழி தான் இந்த சர்வதேச எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டி. கடந்த 25 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம் இதை மேலும் மேலும் நடத்த மாநில அரசு துணை நின்றால் நிச்சயமாக நாம், e இந்திய மாணவர்களை உலக அரங்கில் கல்வியில் சிறக்க செய்வோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *