ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும்
“அமைச்சர்”
ஸ்ரீ அம்மன் மீடியாஸ் T.ஜெயலஷ்மி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர்”.








கதைச்சுருக்கம் : கரை வேஷ்டி கட்டிய ஒரு அமைச்சரின் கறைபடாத ,கண்ணியமான காதல் கதை. போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார்.தன் வசத்தில் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி மூத்த குடிமக்களுக்கு நன்மையும், சமத்துவத்தை பற்றி பேசும் அமைச்சராக திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை.



கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் ,கதாநாயகியாக அட்சயா கண்டமுத்தன் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரமேற்று நடிக்கும் விஜயகுமார் ராமகிருஷ்ணா படத்திற்கு பிறகு ஜெய் ஆகாஷுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் தேவிகா, பிர்லாபோஸ், ஸ்ரேவன் இவர்களுடன் நகைச்சுவை நட்சத்திரங்களாக ‘கலக்க போவது யாரு’ மைக்கேல் அகஸ்டின், திவாகர் , ஈரோடு பிரபு’, விளையாட்டு வீரர் முனைவர் மா .ரா.சௌந்தராஜன்,A.P சேகர் ,திடியன் ஆகியோர் நடிக்கின்றனர் .



இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது .தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் இனிய பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெறுகிறது .அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது..
தொழிற்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் – ஜெய் ஆகாஷ்
திரைக்கதை, வசனம் – T.ஜெயலஷ்மி
இசை – தேனிசை தென்றல் தேவா
ஒளிப்பதிவு – வே .இ ராஜா
பாடல்கள் – சினேகன், மதன் கார்க்கி
எடிட்டர் – ஆண்டனி, ரியாஸ்
நடனம் – ஸ்ரீதர் ,தினா
ஸ்டண்ட் – விஜய்
கலை – பூபதி
மக்கள் தொடர்பு – செல்வரகு