“மெல்லிசை” விமர்சனம்…

Share the post

“மெல்லிசை” விமர்சனம்…

நடித்தவர்கள்:- ஜி.கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன்,

ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- திரவ்.

இசை: ஷங்கர் ரங்கராஜன்.

ஒளிப்பதிவு :-
தேவராஜ்.

தயாரிப்பாளர்கள்:- திரவ் மெல்லிசை” திரவ் இயக்கி தயாரித்திருக்கிறார்.

ஒரு பள்ளியில் பி.டி. ஆசிரியராக வேலை பார்க்கிறார் ராஜன் மற்றும் அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் அவரது மனைவி வித்யாவின்

வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் நகர்கின்றன.

ராஜனுக்கு டிவி பாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு‌ அவருக்கு கிடைக்கின்றது.

அதுல அவர் பிரபலமாகிறார். ஆனால் அந்த போட்டிக்காக

அடிக்கடி லீவ் எடுக்க வேண்டிய நிலை வருகிறது அதனால் அவரது ஆசிரியர் வேலை நிறுத்தம் ஏற்பட்டது.

இதற்கிடையில் குடும்பத்தில் எதிர்பாராத

சம்பவங்கள் நடக்கும் போது, அவருடைய இரண்டு

பிள்ளைகளின் வாழ்க்கை என்ன ஆகின்றது என்பது தான் “மெல்லிசை” படத்தின் கதைக்களம்…

நடிகர் கிஷோர் குமார் இதுவரை வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பார்த்த

ரசிகர்களுக்கு, இந்த படத்தில் முழு கதாநாயகியாக வருகிறார். வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம்

என்றாலும், தேவையற்ற காதல் பாடல்கள் இல்லாமல், மேடையில் பாடும்

காட்சிகள் மட்டும் அவரை வைத்திருப்பது

சரியான முடிவாக உள்ளது. பாடகராக

மாறும் கிஷோர், அதிக அலட்டல் இல்லாமல்

இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

உச்சக்கட்ட பாடல் காட்சியில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கின்றன.

கிஷோர் மனைவியாக நடித்துள்ளார் சுபத்திரா,

இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிற்க வைக்கிறார்.

கணவன் மீது கோபம், பிள்ளைகளிடம் பாசம் என ஒரு

சாதாரண குடும்ப பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.

குழந்தை நடிகர்கள் தனன்யா வர்ஷினி மற்றும் ஜஸ்வந்த்

மணிகண்டன் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பு சங்கர் ரங்கராஜன், போட்டி பாடலுக்கு அழுத்தமான இசை

அமைத்து ஒரு பாடலை நினைவில் நிற்கச் செய்திருக்கிறார்.

சில இடங்களில் இளையராஜா பாடல்கள்

பயன்படுத்தப்பட்டிருப்பதும் படத்திற்கு பலம்.

தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்தின் அழகான பதிவுவை காட்டுகிறார்.

இயக்குனர் திரவ், இசை கலந்து ஒரு மென்மையான

குடும்பக் கதையை சொல்ல வந்திருக்கிறார். இன்றைய ஆக்சன்,

அதிரடி படங்களுக்கிடையில் இப்படிப்பட்ட அமைதியான

கதையை எடுத்தது கொஞ்சம் வித்தியாசம்

இருப்பதுடன், அன்பை மையமாக கொண்டு

சொல்லப்பட்ட இந்த திரைப்படம் அந்த உணர்வை

ரசிகர்களிடம் சேர்க்கும் வகையில் என்பது தான் முக்கியம்.

பொதுவான, உணர்வுப்பூர்வமான படங்களை பார்க்கிற

விரும்புபவர்களுக்கு இது ஒரு நிம்மதியான அனுபவமாக இருக்கலாம்.

“மெல்லிசை” படத்திற்கு சக ரசிகர்களின்

இசைக்கு அமோக ஆதரவு கிடைக்கும் வகையில் கொடுத்துள்ளார்கள்.

குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *