கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடிக்கும் புத்தம்புதிய நெடுந்தொடர் மீரா!
பெண்மையின் மாண்பை கவுரவிக்கும் சின்னத்திரையில் புது கதை!
~எந்தவொரு அநீதிக்கும் எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க பெண்களை ஊக்குவிக்கும் புதிய புரோமோ வெளியீடு~
சென்னை, 11 மார்ச் 2022: இந்திய கலாச்சாரத்தில் வளத்தையும், செழுமையையும் கொண்டுவருபவர்களாகவும், குடும்பத்தை பேணி வளர்க்கும் இல்லத்தரசிகளாகவும் பெண்கள் மதிக்கப்படுகின்றனர். எனினும், தன்னலமற்ற பண்பு, பாசம் மற்றும் தியாகத்தையும் தினசரி அவர்கள் வெளிப்படுத்தினாலும்கூட, அநேக நேரங்களில் வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படும் அப்பாவிகளாகவும் பெண்களே இருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை வளர்ந்துவரும் போக்கின் மீது மக்கள் கவனத்தை திருப்பும் வகையில் நடிகை குஷ்பு நடிப்பில் விரைவில் ஒளிபரப்பை தொடங்கவுள்ள மீரா என்ற புத்தம் புதிய தொடரின் முதல் புரொமோவை, தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டது. 2022 மார்ச் 28ம் தேதி ஆரம்பமாகவிருக்கும் இந்த நெடுந்தொடர் நிகழ்ச்சியானது ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிலவும் கசப்பும், இனிப்பும் கலந்த உறவை சித்தரிக்கிறது; ஒரு வன்முறை சம்பவத்தின் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் எப்படி ஒன்று சேர்கின்றனர் என்பதை இது நேர்த்தியாக பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் காட்சிப்படுத்துகிறது.
ஒரு உணவு மேஜையில் நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் உணவுண்பதை இந்த முன்னோட்ட விளம்பரம் காட்டுகிறது. அனைத்து விஷயங்களும் இயல்பானதாக தோன்றுகிற நிலையில் பார்வையாளர்களை தட்டி எழுப்புகிற ஒரு அதிரடி சம்பவம் நிகழ்கிறது. கிருஷ்ணா (நடிகர் சுரேஷ் மேனன் நடிப்பில்), அவரது மனைவி மீராவை (குஷ்புவின் நடிப்பில்) அவர்களது இரு குழந்தைகளது முன்னிலையில் கன்னத்தில் அறைவதை இந்த வீடியோ காட்டுகிறது. குடும்பத்தின் மீது அக்கறை கொள்ளாது அலட்சியம் செய்வதையும், அவரது விரும்பத்தகாத அணுகுமுறையையும் மீரா கேள்விக்கு உட்படுத்தும்போது இது நிகழ்கிறது. கன்னத்தில் பலமாக விழுந்த இந்த அறை, அவளது கணவரோடு உறவை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு முடிவை எடுக்குமாறு மீராவை கொண்டு செல்கிறது. பல ஆண்டுகளாக நாம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம் என்பதை கோடிட்டுக் காட்டி மீராவின் முடிவை அவளது கணவரான கிருஷ்ணா நிராகரிக்கிறார். குடும்ப வன்முறையை ஒரு இயல்பான நிகழ்வாக தனது குழந்தைகள் கருத தான் விரும்பவில்லை என்று குறிப்பிடும் மீரா தனது கணவருக்கு பதிலடி கொடுக்கிறார். உலகில் நீங்கள் காணவிருக்கும் மாற்றமாக நீங்கள் இருங்கள் என்ற சிறப்பான பொன்மொழியை பிரதிபலிக்கும் கதாபாத்திரமான மீரா, இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உத்வேகமளிப்பவராக இருப்பார்.
இந்தக் கதையில் ஒரு சிறு பகுதியை கலர்ஸ் தமிழ் சமீபத்தில் வெளியிட்டதோடு, ஒரு மிஸ்டு கால் தரும் பரப்புரை திட்டத்தையும் தொடங்கியிருக்கிறது. மனைவியை கணவன் அடிப்பது/தாக்குவது சரிதானா? அல்லது நியாயமற்றதா? என்பது பற்றி தங்களது சிந்தனைகளையும், கருத்துக்களையும் கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண்ணில் பகிர்ந்துகொள்ளுமாறு குஷ்பூ கேட்டுக் கொண்டிருந்தார்.
#SayNoToViolence #StandWithMe #SpeakUpNow #Meera என்பவற்றின் மூலம் தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டில் மீது வீங்கிய முகத்துடனும், கன்னத்தில் பதிந்த கைவிரல் ரேகையோடும் ஒரு நிழற்படத்தை நடிகை குஷ்பூ சமீபத்தில் பதிவிட்டபோது இணையமே பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. இதன் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று பல ரசிகர்கள் தங்களது கற்பனைத் திறன்களைப் பயன்படுத்தி தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டபோது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டதன் மூலம் நடிகை குஷ்பூ இது தொடர்பான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். பெண்கள் திறனதிகாரம் பெறவேண்டுமென்ற குறிக்கோளை எட்டுவது குறித்தும், ஆணாதிக்க சூழலின் மத்தியில் அவர்களின் உரிமைகளுக்காக பெண்கள் தைரியமாக போராட முன்வருவது குறித்தும் #StandWithMeera என்பதன் வழியாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை நடிகை குஷ்பூவும், கலர்ஸ் தமிழ் சேனலும் இந்த புத்தம் புதிய நெடுந்தொடரின் மூலம் எடுத்திருக்கின்றனர். நன்கு படித்திருந்தாலும் அல்லது நகர்ப்புறத்தில் வாழ்பவராக இருந்தாலும் கூட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் இதுபோன்ற மிருகத்தனமான ஒடுக்குமுறையையும், வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற செய்தியினை பார்வையாளர்களுக்கு வலியுறுத்திச் சொல்வது மீரா நெடுந்தொடரின் நோக்கமாக இருக்கிறது.
அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.
கலர்ஸ் தமிழ் குறித்து:2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். வழக்கமான ஸ்டீரியோடைப்களை நொறுக்கி, கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்துவதிலும், முற்போக்கான கருத்தாக்கங்களை அதிக தாக்கம் ஏற்படுத்துகிற நவீன நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை சென்றடைவது மீது முனைப்பு காட்டி வருகிறது. வேலுநாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை,. டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், சிங்கிங் ஸ்டார்ஸ், ஓவியா, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி, மற்றும் திருமணம், தறி, மலர், கல்லா பெட்டி, கோடீஸ்வரி, உயிரே, அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் & கலர்ஸ் கிச்சன் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்ற எமது நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.
வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் நெட்வொர்க்18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம் சிபிஎஸ் ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களான ஒளிபரப்பு, ஆன்லைன், தள அடிப்படையிலான, கடைகளுக்கு உள்ளே மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வழியாக இந்தியாவின் எண்ணற்ற மக்களை சென்றடைகிறது.