மாவீரன் திரை விமர்சனம்

Share the post

ஜெ.துரை

மாவீரன் திரை விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அருண் விஸ்வா தயாரிப்பில் வெளி வந்த திரைப்படம் மாவீரன்

அதிதி சங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர் பரத் சங்கர் இசை அமைத்துள்ளார்

இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது

மாவீரனுக்காக விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்

மக்களுக்காக மாவீரனாக மாறும் ஒரு கோழை ஹீரோவின் கதை தான் மாவீரன் ஒரு சமூகப் பிரச்சினை அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் இந்த இரண்டையும் காமெடி ப்ளஸ் ஆக்‌ஷனுடன் பக்கா கமர்சியல் ஆக உருவாகியுள்ளது

திறமையான காமிக்ஸ் ஆர்ட்டிஸ்ட் சிவகார்த்திகேயன் மாவீரனின் கதைகளை காமிக்ஸ் ஸ்டோரியாக கிரியேட் செய்து சீனியர் ஜார்னலிஸ்ட் ஒருவரிடம் கொடுத்து வாய்ப்புத் தேடுகிறார்

ஆனால் அவரோ அதில் சிவகார்த்திகேயனின் பெயருக்குப் பதிலாக தனது பெயரைப் போட்டுக்கொண்டு ஏமாற்றி வருகிறார் இதனை தெரிந்துகொண்ட நாயகி நிலா (அதிதி ஷங்கர்) சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்து அதே பத்திரிகை அலுவலகத்தில் அவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார்

இன்னொருபக்கம் நதிக்கரையில் வாழும் மக்கள் அனைவரும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட புதிய குடியிருப்புக்கு மாற்றப்படுகின்றனர் அதில் ஹீரோ சிவகார்த்திகேயனின் குடும்பமும் ஒன்று அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்தக் குடியிருப்பில் வசிக்க முடியாமல் மக்கள் அனைவரும் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்

இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்துவிடலாம் என கோழையாக ஓடி ஒளிகிறார் சிவகார்த்திகேயன்

ஒருகட்டத்தில் கோழை ஹீரோ மாவீரனாக மாறுவதும் அதன் பின்னர் வில்லனையும் அவனது ஆட்களையும் புரட்டி எடுப்பதும் எப்படி என்பது தான் திரைக்கதை

மக்களுக்காக போராடி தனது உயிரைகொடுத்த அப்பா போல் தானும் ஆகிவிடக் கூடாது என அஞ்சி நடுங்கும் சிவகார்த்திகேயன் இறுதியில் தனது உயிரே போனாலும் பரவாயில்லை என துணிந்து நிற்கிறார்

இதற்கெல்லாம் காரணம் அவருக்கு மட்டுமே கேட்கும் ஒரு மாயக் குரல் வீரமே ஜெயம் என்ற இந்த ஒற்றை வரியோடு நின்றுவிடாமல் படம் முழுக்க சிவகார்த்திகேயனை துரத்தும் அந்த குரல் தான் நிஜமான மாவீரன்

கோழையாக எல்லாவற்றுக்கும் அஞ்சி நடுங்கும் சிவகார்த்திகேயன் குரல் கேட்டதும் மேலே பார்க்கிறார் அடுத்த நொடியே ஆக்‌ஷனில் இறங்குகிறார்

ஆரம்பத்தில் தனி காமெடி ட்ராக்கில் கதையுள்ளே வரும் யோகிபாபு அதன்பின் சிவாவுடன் சேர்ந்து தனது காமெடியை அளவில்லாமல் கொடுத்துள்ளார்

சிவகார்த்திகேயன் யோகிபாபு காமெடி தான் முதல் பாதியின் மிகப் பெரிய பலம்

ஜெயக்கொடி என்ற வில்லன் கேரக்டரில் மிஷ்கின் மிரட்டுகிறார்

இவர்கள் தவிர பாசமான அம்மாவாக சரிதா ஜூனியர் வில்லனாக அயலி மதன் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்

மொத்தத்தில் காமெடி சென்டிமெண்ட் ஆக்‌ஷன் என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *