கே என் ஆர் மூவிஸ் சார்பில் கே என் ஆர் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மாவீரன் பிள்ளை
இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 23 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு நாயகன் ராஜாவும் வீரப்பன் மகள் விஜயலட்சுமியும் வீரப்பனின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி இப்படத்தின் போஸ்டரை அங்கே வெளியிட்டார்கள்..
பிறகு காடுவெட்டி குருவின் நினைவிடம் சென்று அங்கேயும் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்கள்…