“’மதகஜராஜா’ பட நன்றி நவிழ்தல்… விழாவில் நாயகர் விஷால் , இயக்குநர் சுந்தர்.சி , இசைஞர் விஜய் ஆண்டனி , நாயகி அஞ்சலி ஆகியோருக்கு 70 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் மிக்க ., ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ கௌரவம் !!”
12 வருடங்களுக்கு முன் தயாராகி ஒரு சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் .. MGR (மதகஜராஜா ) படத்திற்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று ., நன்றி நவிழ்தழ்… மற்றும் வெற்றி விழா … நடை பெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் ., சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசையமைப்பாளர்) உள்ளிட்டோரின் கூட்டணியில் ., ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி 12 வருடங்கள் தவமிருந்து , தடைகள் பல கடந்து வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 திரைப்படமாக குறிஞ்சி மலராக வெற்றி வாகை சூடி இருக்கிறது..
13 வருடங்களுக்கு முன் இந்தப்படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்போது வரை இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா, சோஷியல் மீடியா உள்ளிட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை ‘மதகஜராஜா’ படக்குழுவினர் நேற்று (17-02-2025)., சென்னை வடபழனி , கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடத்தினர்.
இந்த நிகழ்வில் MGR (மதகஜராஜா ) படத்தயாரிப்பாளர் மனோகர் பிரசாத் , நாயகர் விஷால் , இயக்குநர் சுந்தர்.சி , இசைஞர் விஜய் ஆண்டனி , நாயகி அஞ்சலி, நடிகர் விச்சு… உள்ளிட்டோருக்கு ., 70 ஆண்டுகள் கடந்த பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சார்பில் அதன் கெளரவ தலைவர் ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன் , துணைத்தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் , செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன், உறுப்பினர்கள் ‘மைசிக்ஸர்’ விஜய் ஆனந்த் , ‘மூவி விங்ஸ்’ தர்மராஜ் உள்ளிட்டோர் ‘MGR’ பட வெற்றிக்கும் , இக்கட்டான உடல் நிலையில் இருந்த மீண்ட விஷாலுக்கும் ., 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடி வரும் சுந்தர்.சி உள்ளிட்டோருக்கும்… மரியாதை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக !!
நன்றி : PRO ஜான்சன் &
Photo Grapher :சித்ரா மணி.