மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, S தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் #RT4GM திரைப்படம் பிரமாண்டமான முறையில் துவங்கியது!!

Share the post

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, S தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் #RT4GM திரைப்படம் பிரமாண்டமான முறையில் துவங்கியது.

வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார்.

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார்.

நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர், மேலும் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் S தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவி தேஜாவுடன் தமனுக்கு இது 12வது படம், கோபிசந்த் மலினேனியுடன் 7வது படமாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் 4வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், சமீபத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜவான் படத்தினை காட்சிப்படுத்திய திறமை மிகு ஒளிப்பதிவாளரான GK விஷ்ணு, #RT4GM இன் மாபெரும் உலகத்தை காட்சிப்படுத்தவுள்ளார்.

தேசிய விருது பெற்ற டெக்னீஷியன் நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, AS பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். வசனங்களைச் சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார், மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா ஆகியோர் மற்ற எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.

நடிகர்கள்: ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
கதை மற்றும் இயக்கம்: கோபிசந்த் மலினேனி
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர்
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
CEO: செர்ரி
நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்
இசை: S தமன்
ஒளிப்பதிவு : GK விஷ்ணு
எடிட்டர்: நவீன் நூலி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
தயாரிப்பு வடிவமைப்பாளர்: AS.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: அனிருத்/தீபிகா
எழுத்தாளர்கள்: மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா
விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
பப்ளிசிட்டி : பாபா சாய் (மேக்ஸ் மீடியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *